என் மலர்
நீங்கள் தேடியது "Power line"
- மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
- அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வயல்வெளிகளில் தரையில் மின்சாரகம்பி கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ரமேஷ் மின்கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர்.
- முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் இன்று காலை மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி திடீரென்று அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அலறியடித்து ஓடினர் இதனை தொடர்ந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணத்தினால் உடனடியாக மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து மின்சார துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்ததின் பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர். பின்னர் அறுந்து விழுந்த மின் கம்பியை மீண்டும் சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தெருவில் தனியார் மருத்துவமனைகள், ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாகனங்க ளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், குழந்தைகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது . இதன் காரணமாக மிக முக்கியசாலையாக கருத ப்படும் பகுதியில் இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய கனமழைபெய்து வருகின்றது. மேலும் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே தற்போது மின் கம்பிகள் பழுது ஏற்பட்டு தளர்ந்து உள்ளது . இது போன்ற தொடர்ச்சியாக மழை பெய்யும் சமயங்களில் மின்சாரத்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு பகுதியாக உள்ள மின்கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து இது போன்ற மின்கம்பி அறுந்து விழும் நிகழ்வுகளை தவிர்க்காமல் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட ம் பேரிடர் மாவட்டமாக உள்ளதால் எந்நேரத்திலும் மழை அதிகளவிலும், காற்று சூறாவளி காற்றா கவும் மாறக்கூடிய அவல நிலையில் உள்ள பகுதியாக இருப்பதினால் மின்சாரத்துறை அதிகாரிகள் மழைக்காலங்கள் தொடங்கு வதற்கு முன்பு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் திடீரென்று மின் கம்பி சாலையில் அறுந்து விழுந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
- மின் வாரிய ஊழியர்களின் பணியை பொதுமக்கள் பாராட்டினர்.
உடன்குடி:
உடன்குடி நகரப் பகுதியில் அவ்வபோது பலத்த காற்று வீசும் போது, மின்சார கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகள் மின்சார கம்பியில் தேய்த்து அடிக்கடி பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதனால் மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உடன்குடி பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் மின்சார துறையினர் செயல்பட்டனர். ஒவ்வொரு டிரான்ஸ்பார்மாக மின்சாரத்தை நிறுத்தி இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது பணியை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பேராவூரணி :
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன.
மேலும், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மின்மாற்றியும் உள்ளது. தாழ்வாகச் செல்லும் மின் கம்பியாலும், பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றியாலும், அதன் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜமாணிக்கம், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் கூறுகையில், "மக்களைத் தேடி முதல்வர் முகாமில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் வந்த பதில் கடிதத்தில், 100 தினங்களுக்குள் அகற்றப்படும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்கம்பி அகற்றப்படாமல், மின்மாற்றி இடமாற்றம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அருகில் உள்ள சித்தாதிக்காடு பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு உத்தரவிட்டும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, இம்மாத இறுதியில் மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமத்தினரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளனர்.
- லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள சிகார்பாளையம் சாலை வளைவில், காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் நிலக்கரி முற்றிலுமாக சாலையோரத்தில் கீழே கொட்டியது. லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் (வயது 25) லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஒரு மின்கம்பியில் மோதி கவிழ்ந்ததில், உயிர் இழப்பு இல்லாமல் தப்பித்தது, அதிர்ஷ்டவசமாக நிகழ்வாகும். இவ்விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






