search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer sacrifice"

    • தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அடுத்த நகரந்தலை சேர்ந்தவர் தொப்பளான் (வயது 23). விவசாயி.

    இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் நகரந்தலில் இருந்து சேத்துப்பட்டுக்கு தனது பைக்கில் சென்றார். கடையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த பைக் இவர் ஓட்டி வந்த பைக் மீது திடீரென மோதியது. இதில் தொப்பளான் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தொப்பளான் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ராமலிங்கம் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொப்பளான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற பைக்கை தேடி வருகின்றனர்.

    • நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது பரிதாபம்
    • தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த கரிபூரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 31). விவசாயி.

    இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார்.

    அப்போது அருகே இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார்.

    இதில் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றில் மூழ்கி இறந்தார். வெகு நேரமாகியும் மணிகண்டன் வீட்டுக்கு வராததால் அவரைத் தேடி குடும்பத்தினர் இன்று காலை நிலத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது மணிகண்டன் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் சேத்துப்பட்டு போலீசா ருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    விசாரணை

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மணிகண்டன் உடலில் கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது சம்பந்தமாக சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாண்டியன் பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • கிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த வர் ராஜபாண்டியன் (40)விவசாயி. இவர் நேற்று இரவுதாழம்பட்டி லிருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பண்ருட்டி -கும்பகோ ணம் சாலை பணிக்கும் குப்பம் அருகே வந்து கொண்டி ருந்தபோதுபண்ருட்டியிலிருந்துசாத்திப்பட்டு சென்றுகொண்டிருந்த

    மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜபாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த ராஜபாண்டியன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் தெரிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஏட்டு கோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா, கரிக்கலாம்பாடி ஊராட்சியை அடுத்த ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 45), மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (54) விவசாயிகள்.

    இவர்கள் இருவரும் இன்று (2-ந்தேதி) அதிகாலை 4 மணி அளவில், தங்களது நிலங்களில் விளைந்த மணிலா மற்றும் நெல் உள்ளிட்ட பொருட்களை, மாதப்பூண்டியை சார்ந்த பிரசாந்த் (26) என்பவருக்கு சொந்தமான மினி வேனில் ஏற்றிக்கொண்டு, கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

    கருங்காலிகுப்பம் அருகே வரும்போது எதிர்பாராத நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் குமார், பழனி மற்றும் டிரைவர் பிரசாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் பிரசாந்த் மற்றும் குமார் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். பழனிக்கு தலை, கை மற்றும் காலில் படுகாயம் அடைந்து வாகனத்தில் சிக்கி கொண்டார்.

    கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு துறையினர் 2-மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பழனியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மணிகண்டன் காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
    • மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நடுக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). விவசாயி. இவர் இன்று காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். அங்கு உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக சென்றது. இக்கம்பி நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் உரசி சென்றது. இந்த மரத்தின் தென்னை ஓலை நிலத்திற்கு செல்லும் வழியில் படர்ந்து இருந்தது.

    அந்த வழியில் நடந்து சென்ற விவசாயி மணிகண்டன், வழியில் படர்ந்திருந்த தென்னை ஓலையை நகர்த்திவிட்டு செல்ல முயற்சித்தார். தென்னை மரத்தில் பாய்ந்த உயர் மின் அழுத்த மின்சாரம், மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்த பக்கத்து நில உரிமையாளர்கள், இது தொடர்பாக மணிகண்டன் குடும்பத்தாருக்கும், மரக்காணம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அங்கு வந்த விவசாயி மணிகண்டன் குடும்பத்தார் கதறி அழுத காட்சி காண்போரின் மனதை கலங்கடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது என மின்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்தி ருந்தால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    • லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள முன்னூர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 44) விவசாயி. இவர் நேற்று இரவு செங்கத்திலிருந்து முன்னூர் மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். குயிலம் கூட்ரோடு அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிரே வந்த மினி வேன் குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக உரசியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
    • மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப் பாடி அடுத்த சிங்கிபுரம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விளைந்த மக்காச்சோளத்தை ஏற்றிக் கொண்டு, வாழப்பாடி மங்கம்மா சாலையிலுள்ள வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது. இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து விவ சாயி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

    இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விளை பொருளை கொண்டு சென்ற போது மின்சாரம் பாய்ந்து பலி யான விவசாயி குடும்பத்திற்கு அரசு நிவா ரணம் வழங்க வேண்டுமென இவரது உறவினர்களி டையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார்.
    • டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது பெலாக்காடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார். நேற்று கோவிந்தன் வயலில் இருந்து டிராக்டரை ஓட்டிக்கொண்டு பெலாக் காட்டிற்கு வந்து கொண்டி ருந்தார்.டிராக்டரில் பெலாக் காட்டைச் சேர்ந்த தொழிலா ளிகள் பழனிசாமி, இன்னொரு பழனிசாமி ஆகியோர் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.

    இதில் கோவிந்தன் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். பலத்த காயம் அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.டிராக்ட ரில் இருந்த கூலி தொழிலா ளர்கள் பழனிசாமி உள்ளிட்ட 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர். இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி மற்றும் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான விவசாயி கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

    • மனைவி படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாயனசெருவு ஊராட்சி பந்தூ ரான் வட்டத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 48), விவசாயி. இவரது மனைவி சுசிலா (35). நேற்று மாலை இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மல்லானூரில் உள்ள மருத் துவமனைக்கு சென்றனர்.

    தகரகுப்பம் அருகில் உள்ள வளை வில் சென்ற போது தொட்டிகிணறு பகுதியில் இருந்து நாட் றம்பள்ளி நோக்கி வந்த அரசு டவுன் பஸ் திடீரென மோட் டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுசிலா படுகா யம் அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் சுசிலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம் பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டி ருந்த பொழுது திடீரென செல்வராஜிக்கு வலிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நல்லாத்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 43).விவசாயி. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். இதனால் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டி ருந்த பொழுது திடீரென செல்வராஜிக்கு வலிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் செல்வராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கச்சிரா யபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

    • மீன் வாங்கிக் கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • பால் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே

    உள்ள வி.புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சோம சுந்தரம் (வயது 45) விவசாயி. இவர் ஜேடர்பாளையம் பகுதியில் மீன் வாங்கிக் கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு‌ பகுதி யில் சென்றபோது, கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோம சுந்தரத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். அதிவேகமாக வந்துவிபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில் பால்‌ கேன்கள் சாலையில் விழுந்து, பால் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடி வீணானது. மேலும் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவி னுள் சிக்கி இருந்த ஓட்டுநர் குணசேகரனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். குணசேகரன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் ஜேடர்பாளையம் போலீ சாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் இறந்த சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் மினி ஆட்டோவை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சோழசிராமணியைச் சேர்ந்த குணசேகரனை (30) போலீசார் கைது செய்து, மினி ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • வரதராஜன் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார்.
    • வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கச்சி மயிலூர் கிராம த்தை சேர்ந்தவர் வரதராஜன்,(வயது 41.) இவர் நேற்று தனது வயலில் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார். இந்நிலையில், மாலை வயலில் உழவு ஓட்டி க்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் முன் பகுதி தூக்கிக்கொண்டு தலை கீழாக கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×