கொளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

பால வாடியை சேர்ந்த முத்து (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
கொளத்தூர் அருகே  மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மாமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த மோட்டார் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அதன் பழுதை நீக்கி, சரி செய்வ தற்காக கோவிந்த பாடியை சேர்ந்த மெக்கானிக் ராமசாமி (40) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மாமரத்துகாடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இதே போல பால வாடியை சேர்ந்த முத்து (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கொளத்தூர் அருகே கோவிந்தபாடியை அடுத்த விநாயகபுரம் என்ற இடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம், ராமசாமி ஆகியோர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாப மாக உயிரிழந்தார். தொடர்ந்து ராமசாமி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சிகிச்ைச பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com