வேப்பூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

வரதராஜன் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார். வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
பலியான விவசாயி வரதராஜன்.
பலியான விவசாயி வரதராஜன்.
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கச்சி மயிலூர் கிராம த்தை சேர்ந்தவர் வரதராஜன்,(வயது 41.) இவர் நேற்று தனது வயலில் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார். இந்நிலையில், மாலை வயலில் உழவு ஓட்டி க்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் முன் பகுதி தூக்கிக்கொண்டு தலை கீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com