விவசாயி பலி

ராசாம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதுமருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்
விவசாயி பலி
Published on

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (58). விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்தில் உள்ள மாடுகளில் இருந்து பாலை கறந்து சாலைப்புதூரில் உள்ள பால் சொசைட்டிக்கு 2 சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்.

இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com