சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபரீதம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
Published on

செங்கம்:

செங்கம் அருகே உள்ள முன்னூர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 44) விவசாயி. இவர் நேற்று இரவு செங்கத்திலிருந்து முன்னூர் மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். குயிலம் கூட்ரோடு அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிரே வந்த மினி வேன் குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக உரசியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com