வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது.
பலியான விவசாயி வெங்கடேஷ்.
பலியான விவசாயி வெங்கடேஷ்.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப் பாடி அடுத்த சிங்கிபுரம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விளைந்த மக்காச்சோளத்தை ஏற்றிக் கொண்டு, வாழப்பாடி மங்கம்மா சாலையிலுள்ள வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது. இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து விவ சாயி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விளை பொருளை கொண்டு சென்ற போது மின்சாரம் பாய்ந்து பலி யான விவசாயி குடும்பத்திற்கு அரசு நிவா ரணம் வழங்க வேண்டுமென இவரது உறவினர்களி டையே கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com