மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

கடலூர்:

காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வயல்வெளிகளில் தரையில் மின்சாரகம்பி கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ரமேஷ் மின்கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com