உடன்குடி மாவட்ட அளவிலான டிராபி கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி

தொடர்ந்து சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், பீல்டர், சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசு, தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக இளையோருக்கான போட்டியில் ஆர்எஸ்புரம் அணியினர் முதல்பரிசும், மருதூர்கரை அணியினர் 2-ம் பரிசினை பெற்றனர். பார்வையாளர்களுக்கான குலுக்கல் போட்டியில் முதல் பரிசு சைக்கிள், 2-ம் பரிசு டிரஸ்ஸிங் டேபிள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன
உடன்குடி மாவட்ட அளவிலான டிராபி கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி
Published on

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள சடையநேரி மைதானத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் வாழத்தூர், எம்.எம்.ஸ்போர்ட்ஸ் கிளப், மரியம்மாள்புரம், மெய்யூர், ரைசிங் லெவன், சன்லயன்ஸ் சந்தையடியூர், குலசை ஹசானியா, பரமன்குறிச்சி ராயல்புல்ஸ், ராயல்கிளப் புதுவை, ஆர்எஸ்புரம், திசையன்விளை 11 லெஜன்ட்ஸ், மற்றும் தோரணை தோழர்கள் அணியினர் கலந்து கொண்டு 3 நாட்கள் விளையாடினர்.

இதில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ராயல்கிளப் புதுவை அணியினருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையை மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருபாராஜாபிரபு வழங்கினார். 2-ம் இடம்பிடித்த தோரணை தோழர்கள் அணியிணருக்கு ரூ.15ஆயிரம் வெற்றிக்கோப்பையை உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் பாலசிங் வழங்கினார்.

3-ம் இடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் அணியினருக்கு ரூ.7ஆயிரத்தை மருதூர்கரை மனோஜ், 4-ம் இடம் பிடித்த எம்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு ரூ.4ஆயிரத்தை மெக்கானிக் பாண்டி வழங்கினார்.

தொடர்ந்து சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், பீல்டர், சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசு, தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

முன்னதாக இளையோருக்கான போட்டியில் ஆர்எஸ்புரம் அணியினர் முதல்பரிசும், மருதூர்கரை அணியினர் 2-ம் பரிசினை பெற்றனர். பார்வையாளர்களுக்கான குலுக்கல் போட்டியில் முதல் பரிசு சைக்கிள், 2-ம் பரிசு டிரஸ்ஸிங் டேபிள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தோரணை தோழர்கள் அணியினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com