search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "santhana mariamman"

    • 200-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி பாதை அமைக்கும் பணி நடந்தது.
    • கூடுதல் தகவல் பெறப்படும் வகையில் கண்ணன் தலைமையில் 13 பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரங்கம் கிராம பகுதியை ஒட்டி சேர்வராயன் வடக்கு வனச்சராக காப்புக்காடு உள்ளது. அங்குள்ள 200-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி பாதை அமைக்கும் பணி நடந்தது. இதற்கு வனத்துறையினர் உடந்தையாக இருந்து மக்களிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து வன அலுவலர் பரசுராமமூர்த்தி, மற்றும் வனவர்கள் சொன்ன கிருஷ்ணன், ராகுல் ,பொன்னுசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது .அவர்கள் விளக்கங்களை சேலம் கோட்டவன அலுவலர் கவுதமுக்கு அனுப்பினார் .

    இதனிடையே கோட்ட வன அலுவலர் கவுதம் மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து விசாரித்தார் .தொடர்ந்து உதவி வனபாதுகாவலர் கண்ணன் விசாரித்து வன அலுவலருக்கு அறிக்கை அளித்தார். இதை தொடர்ந்து கூடுதல் தகவல் பெறப்படும் வகையில் கண்ணன் தலைமையில் 13 பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்களும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.இந்த விசாரணை அறிக்கை வன அதிகாரி கவுதம் மூலம் சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் மரம் வெட்டப்பட்ட விவகாரத்தில் தொடர்பு உடைய 4 பேரும் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த விவகாரத்தில்குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • உடன்குடி சிவலூர் காலனியில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவி லில் வளைகாப்புவிழா நடை பெற்றது.
    • பெண்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி சிவலூர் காலனியில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவிலில் வளைகாப்புவிழா நடை பெற்றது.

    பெண்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

    இதனை அடுத்து அம்மனுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு 7 வகை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஊர் தலைவர் பாலமுருகன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    இதில் ரகு, அஜித், மாதேஷ், மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ந் தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    காலை 6 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை பாராயணம், தொடர்ந்து தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகளும், 11 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு யாகசாலை பூஜையும் தொடங்குகிறது. 9-ந் தேதி 3-ம் கால யாக சாலை பூஜையும், 10-ந் தேதி காலையில் 4-ம் கால யாக சாலை பூஜையும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    11-ந் தேதி காலையில் யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 12 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் டாக்டர் இசக்கியாபிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×