search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் ரூ.4.22 கோடியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    உடன்குடியில் கூடுதல் துணை மின்நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்.

    உடன்குடி பகுதியில் ரூ.4.22 கோடியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • உடன்குடி துணைமின்நிலை யத்திலிருந்து மின்விநியோகம் தொடங்கும் போது வீடுகளுக்குத் தனியாகவும், விவசாய மின்மோட்டார்களுக்குத் தனியாகவும் மின்விநியோகம் செய்ய முடியும்.
    • மேலும் மின்சாரத்தை மலிவு விலையிலும் வழங்கமுடியும்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் துணை மின்நிலைய வளாகத்தில் ரூ.4.22 கோடி மதிப்பில் கூடுதல் துணை மின் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.

    செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், மின்சார மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் ரெமோனா, திருச்செந்தூர் செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உடன்குடி உதவி செயற்பொறியாளர் ராம்மோகன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தைடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரூ.4.22கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மறு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மான துறைக்கான திட்டம் என்பது விவசாயம் தவிர்த்த ஏனைய மின் இணைப்புகளுக்கும், விவசாய பணிகளுக்கும் தடையற்ற மின்சாரத்தை தனித்தனி வழித்தடம் மூலம் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சீரான வகையில் வழங்குவதை உறுதிசெய்யும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது வீடுகளுக்கு 24மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்ய முடியும், அதே போல் விவசாயத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மின்விநியோகம் தடையின்றி கிடைக்கும்.

    மேலும் மின்சாரத்தை மலிவு விலையிலும் வழங்கமுடியும். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் மின்பாதைகள் பிரிக்கப்பட்டு புதிய விநியோக மின்மாற்றிகளுடன் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடற்பாடுகளை தாங்கி நிற்கும் வகையில் புதிய மின்வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமை அடைந்து உடன்குடி துணைமின்நிலை யத்திலிருந்து மின்விநியோகம் தொடங்கும் போது வீடுகளுக்குத் தனியாகவும், விவசாய மின்மோட்டார்களுக்குத் தனியாகவும் மின்விநியோகம் செய்ய முடியும்.

    மாவட்டத்திலேயே உடன்குடி துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் 11கேவி பரமன்குறிச்சி மின்பாதையில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது செட்டியாபத்து, வாத்தியார்குடியிருப்பு தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, குருநாதபுரம், சீருடையார்புரம் கிராமங்களைச் சேர்ந்த 4300 பயனீட்டார்களும், 760 விவசாயிகளும் பயனடைவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் நாசரேத் முத்துகிருஷ்ணன், ஆறுமுகநேரி ஜெயக்குமார், சாத்தான்குளம் ரவிந்திரகுமார், ஆறுமுகநேரி முத்துகணேசன், தூத்துக்குடி வேலாயுதம், உதவி பொறியாளர்கள் மகாலிங்கம், ராஜேஷ், வேலாயுதம், இம்மானுவேல், நிர்வாக அலுவலர் கலைக்கண்ணன், திருச்செந்துர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஆவின் சேர்மன் சுரேஷ், தி.மு.க. மாவட்ட மகளிரணி ஜெஸிபொன்ராணி,

    இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட துணைஅமைப்பாளர்கள் விவசாயஅணி சக்திவேல், வர்த்தகஅணி சந்தையடியூர் ரவிராஜா, மாணவரணி அலாவூதீன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், ஹீபர், தாண்டவன்காடு தன்ராஜ், பேரூராட்சி நியமனக்குழு ஜான்பாஸ்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பேரூராட்சி துணைச்செயலாளர் தங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், ஒன்றிய பிரதிநிதி ஷேக்முகமது, முருகன், ராஜேஸ்வரி, கோமதி நாயகம், தினகர், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×