என் மலர்

  நீங்கள் தேடியது "Manapadu beach"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர்.
  • எனவே தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர்.

  உடன்குடி:

  திருச்செந்தூர் வட்டம் உடன்குடி ஒன்றியம் மணப்பாடு கடற்கரை கிராமம் பெரும்பாலான மீனவ மக்கள் வசிக்கும் கிராமம் ஆகும்.

  மலை திட்டுகள்

  இங்குஉள்ள 90சதவீதம் மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். சுமார் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள் நாட்டுப்படகுகள், கட்டுமரம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர். படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் திண்டாடுகின்றனர்.

  அவதி

  மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதிபடுகின்றனர் ஒருபுறம், மறுபுறம்மீன்களை சுமந்து செல்லும் நிலை‌யில் தவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே. எனவே தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர். கடலில் உருவாகும் மணல் திட்டுகளை ராட்சச எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி கடற்கரையில் குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடன்குடி அருகே மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • குடும்பத்துடன் கடலில் நீராடிதங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

  உடன்குடி:

  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்டது மணப்பாடு கடற்கரை. தற்போது பள்ளிகளுக்கு கோடை காலவிடுமுறை என்பதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி குடும்பத்தோடு இங்குவந்து கொண்டிருக்கின்றனர்.

  கடற்கரையையொட்டி இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, குன்றின் மீதுஉள்ள திருச்சிலுவைநாதர் ஆலயம், ஆலயத்திற்குப் பின்புறம் உள்ள கலங்கரை விளக்கு, புனித சவேரியார் வாழ்ந்தகுகை, தியான மண்டபம், நாழிக்கிணறுஆகியவற்றை பார்த்து ரசிப்பதும், மணல் குன்றின் மீதுஏறி விளையாடுவதும், பின்பு குடும்பத்துடன் கடலில் நீராடிதங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

  இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தனிநபர்கள்கடலில் பிடித்த பலவகையான மீன்கள், நண்டு. இறால் போன்றவற்றை பொறித்து விற்பனை செய்கின்றனர். மேலும் ஐஸ் கிரீம் உட்பட பல வகையான தனியார் கடைகள் உள்ளது.

  இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மணப்பாடு கடற்கரை தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே உள்ளது.

  திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக உவரி, கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை.

  ×