search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா - இன்று இரவு தொடங்குகிறது
    X

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா - இன்று இரவு தொடங்குகிறது

    • நாளை மற்றும் நாளை மறுநாள் விழாவில் சுற்றுபுற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • 3-ந்தேதி காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு சிறப்பு மகுட நிகழ்ச்சி, 11 மணிக்கு கும்பம் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடன்குடி:

    குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடிக் கொடை விழா இன்றுஇரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை, நாளை (2-ந்தேதி) காலை 7 மணி, காலை 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 10 மணிக்கு கும்பம் தெரு வீதி வருதல், வில்லிசை மகுட இசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம்,

    இரவு 8 மணிக்கு வில்லிசை, மகுட இசை இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி வருதல் மற்றும் இரவு முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.3-ந்தேதி காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு சிறப்பு மகுட நிகழ்ச்சி, 11 மணிக்கு கும்பம் வீதி உலா, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் விழாவில் சுற்றுபுற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கொடை விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×