search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traders"

    • இந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா மற்றும் அறிமுக கூட்டம் உடுமலையில் நடைபெற்றது.
    • மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.

    உடுமலை:

    இந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா மற்றும் அறிமுக கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜெகன் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.

    மாவட்ட தலைவர் யு.கே.பி.பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி நன்றி கூறினார்.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர் சாரல் மழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிகாலையிலேயே அதிகளவில் திரண்டனர்.
    • கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற சங்கரா மீன் ரூ.400 விற்பனையாகி உள்ளது.

    நாகப்பட்டினம் : 

    நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம், கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகாலை கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரி யர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர்.

    ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, நாளை ஆடி அமாவாசை என்பதால் விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    அதாவது கடந்த வாரம் ரூ500 விற்ற சங்கரா 400 க்கு விற்பனையாகி உள்ளது.

    கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இரண்டு மாதம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் அதிக அளவில் கேரள மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்குவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முகாமிட்டு இன்று மீன்களை அதிக அளவில் வாங்கி கொண்டு கனரக வாகன மூலம் கேரளாவுக்கு செல்கின்றனர்.இதே போல் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்க வந்துள்ள நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மீன் பிரியர்கள் ஏராளமானோர் துறைமுகத்தில் குவிந்துள்ளதால் நாகை மீன்பிடித் துறைமுகம் களைக்கட்டி உள்ளது.

    மீன்களின் விலையை பொருத்தவரை வஞ்சரம் ஒரு கிலோ 650- 900, பாறை 350 முதல் 450,சீலா 400 முதல் 450,கண்ணாடி பாறை 400 முதல் 450,இறால் 400 முதல் 500 க்கும் விற்பனையாகிறது

    • வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என 4 மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த 4 மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதி யாக உசிலம்பட்டி பஸ் நிலையம் உள்ளது.

    1996-ம் ஆண்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் சிதிலமடைந்தது. இதைத் தொடர்ந்து சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    பயணிகள் வசதிக்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. புனரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களை நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன் அறிவிப்பின்றி பஸ் நிலையத்தை மூடியுள்ளதாக குற்றம் சாட்டி பஸ் நிலைய வளாக கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த அய்யப்பன் எம்.எல்.ஏ., வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டார். உசிலம்பட்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் எம்.எல்.ஏ., வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து தடுப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. கால அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் ஸ்வநிதி திட்டம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து, சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டியினை வழங்கினார்.

    சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதனடிப்படையில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தலா ஒரு வண்டியின் விலை ரூ 1,06,000 மதிப்பீட்டில்,9 உணவு மற்றும் பழ விற்பனை வண்டிகளை ரூ. 9.54,000 மதிப்பீட்டில் மற்றும் ஒரு பூ விற்பனை வண்டி ரூ.60,000 மதிப்பீட்டில் என ரூ. 10,14,000 மதிப்பீட்டில் விற்பனை வண்டிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டிக்கான ஆணையை மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    அருகில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள், மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக வாரச்சந்தைக்கு ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் ராமநாத புரம் புதிய பஸ்நிலையத்தை ரூ.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாரச்சந்தை அமைக்க நகராட்சி நிர்வா கம் தடை விதித்திருந்தது. இதனால் வியாபரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று புதன்கிழமை என்பதால் அதிகாலையி லேயே வழக்கமான வாரச் சந்தை நடக்கும் பகுதிக்கு வந்த வியாபாரிகள் அங்கு கடை வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து புதிய பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வாரச்சந்தை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடை அமைக்க வேண்டாம் என கூறினர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நகராட்சி நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து வாரச்சந்தை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென ராமநாதபுரம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்று மட்டும் வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் வாரச்சந்தை வேறு ஒரு இடத்தில் அமைக்க மாற்று இடம் தரப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
    • கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அங்கு கடைகள் அமைத்திருந்த சிறு, குறு வியாபாரிகள் தங்களது முதலீடுகளை இழந்து கடுமையாக பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காதர்பேட்டையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு கடை அமைத்திருந்த 57 கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளை சார்பாக வியாபாரி சசிகுமாரிடம் வழங்கப்பட்டது.

    இதில் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், கடை வியாபாரிகளின் நிலையை விளக்கி, அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

    • விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், வாழை, கருப்பட்டி போன்ற பல்வேறு பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
    • வாரச்சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் தற்காலிகமாக தெற்கு பஜாரில் ரோட்டின் இருபுறமும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வளாகம் உடன்குடி மெயின் பஜாரில் நான்கு சந்திப்பு இடத்தில் சுமார் 10 பரப்பளவில் உள்ளது.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் கூடும் இந்த வார சந்தையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரு வியாபாரிகள் வந்து செல்வார்கள். சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை 8 மணி முதல் இரவு 9மணி வரை தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், வாழை, கருப்பட்டி போன்ற பல்வேறு பொருட்களை நேரடியாக கொண்டு வந்து, விற்பனை செய்வார்கள். தற்போது இந்த வார சந்தை புதிய வடிவத்தில் கட்டும் பணி தொடங்கி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாரச்சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் தற்காலிகமாக தெற்கு பஜாரில் ரோட்டின் இருபுறமும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    சாலையோரம் கடை வைத்து கடும் அவதிப்படு வதாகவும், உடனடியாக வார சந்தை வளாகத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்றும் வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.
    • பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. பின்னர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த பூக்கடைகள் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் வீரராகவப்பெருமாள் கோவில் பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த பூக்கடை வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. மேலும் காட்டன் மார்க்கெட் வளாகத்திலேயே பூ மார்க்கெட் செயல்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து காட்டன் மார்க்கெட் பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் கடைகள் அனைத்தும் தொடர்ந்து இதே வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
    • ரூ.733 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    காங்கயம் :

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூரில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

    கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்நிலையில் ரூ.733 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்பும் தெரிவித்தும் வருகின்றனா்.

    இந்நிலையில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரியும், மண் வாய்க்காலாகவே தொடா்ந்தும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் காங்கயம் தாலுகாவுக்குட்பட்ட திட்டுப்பாறை, நத்தக்காடையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    • தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை மூலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • புகைப்பிடிக்கக் கூடாது என்ற வாசகம் ஒட்டாத கடைகள் உள்ளிட்ட சில கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

    அவினாசி :

    தேசிய புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை மூலமாக சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே கருவலூரில் சுகாதாரத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

    இதில் கருவலூா் அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டு புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைகள், புகைப்பிடிக்கக் கூடாது என்ற வாசகம் ஒட்டாத கடைகள் உள்ளிட்ட சில கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எவ்வித முன்னறிவிப்புமின்றி சோதனை மேற்கொண்டதை கண்டித்தும் கருவலூா் வணிகா் சங்கத்தினா் சாா்பில் அப்பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனா். 

    • கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது.
    • கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது.

    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மொத்த பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இந்தப்பகுதியில் கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகிய 3 பேர் மொத்த பலசரக்கு கடைகளை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஜி.எஸ்.டி. இயக்குநரக அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ரூ.66 கோடி வரை 3 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலசரக்கு கடைகளுக்கு வந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அங்குள்ள ரசீதுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கூறி அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பதட்டமடைந்த அவர்கள், மகாத்மா காந்தி நகர் வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அதிகாரிகள் எந்த தகவலையும் கூற மறுத்ததோடு, 3 பேரையும் சந்திக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது. அதிகாரிகளும் சரியாக பதிலளிக்கவில்லை.

    இதை கண்டித்தும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரை விடுவிக்க வலியுறுத்தியும் நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கீழமாசியில் கடை வைத்து வியாபாரம் செய்ய மொத்த முதலீடு ரூ.50 லட்சம் தான். ஆனால் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.66 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. ஜி.எஸ்டி. தொடர்பாக ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் எஸ்டி மேட் பில் என கூறப்படும் ரத்தான பில்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரையும் விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×