search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traders"

    • தடுப்பணை கட்டி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
    • தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில்பொறுப்பாளர்கள்ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஞானமணி தலைமை வகித்தார்.

    செயலாளர் சத்யநாராயணன், பொருளாளர் வெங்கட்ராஜ், கௌர வதலைவர் கார்த்தி கேயன், ஆலோசகர் சேதுராமன், இளங்கோவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்னாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    வரும் காலத்தில் இது போன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் கூடுதலாக தடுப்பணைகளை தமிழக அரசு கட்டவேண்டும்.

    அவ்வாறு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக்கிடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

    • தட்டார்மடம் போலீஸ் நிலையம் அருகே முன்பு செயல்பட்ட இடத்தில் மீண்டும் வாரச்சந்தை தொடங்கப் பட்டது.
    • வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டார்மடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை முறையாக செயல்பட்டு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். மேலும் அந்த வாரச்சந்தை செயல்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்ததால் அதனை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நேற்று கோழி மற்றும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. அவைகளை முறையாக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காய்கறி மற்றும் இதர கடைகள் வருகிற வாரம் செயல்படும் என தெரிவிக்கப் பட்டது. வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. கிளை செயலாளர் முரளி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கிருஷ்ண குமார், கோவில் தர்மகர்த்தா ஆதி லிங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சகாய் விஜயன், ஆடு வியாபாரிகள் கிருஷ்ணன், நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

    இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.

    • சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
    • போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

     அவிநாசி

    அவிநாசி நகரப் பகுதியில் வைக்கப்படும் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.

    இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், சாலையோர கடைகள் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.

    இதனைக் கண்டித்தும், சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.சங்க பொருளாளா் தனசேகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் காா்த்திகேயன், மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் ஈசுவரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    • அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம்.
    • வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படக்கூடிய துறைமுகத்தில் பொதுமக்கள் மிக மிக குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த தொய்வுடன் காணப்பட்டனர். மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் கிலோ 250 ரூபாய்க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150-க்கும், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள்
    • தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில்

    குளித்தலை,  

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் குளித்தலை மற்றும் தோகைமலை பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குளித்தலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் லலிதா தலைமை வகித்தார், குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காய்கறி கனி 19 தள்ளு வண்டிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார், நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சச்சின்ராம், தகவல் தொழில்நுட்பம் அமுல்ராஜ், ஒன்றிய கழக நிர்வாகி பரளி குமார், ஜோதிவேல், கிளை செயலாளர் அருணாச்சலம், ராஜேந்திரம் கோபால், மேல தண்ணீர்பள்ளி கிளை செயலாளர் ஸ்டாலின் விக்னேஸ்வரன், மாணவரணி லோகேஸ்வரன், ஒன்றிய கழக நிர்வாகி ஜெகநாதன், பொறியாளர் அணி ஹரிஹரன், மேட்டுமருதூர் ஆறுபாஸ்கர், கழக நிர்வாகிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
    • வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 09 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 0.88 கோடி ரூபாய் ஆகும்.

    இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409,

    சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,279/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
    • கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.

    தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
    • போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது.

    அவினாசி:

    அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லாலா கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வியாபாரிகள் சங்க மாவட்ட துணை தலைவர் முத்தாரம்மன் தனசேகர், பகுதி செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:- அவினாசியில் பிரதான சாலையின் இருபுறமும் உள்ள திடீர் கடைகளால் போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. ஆகவே ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதை தடுக்கும் பொருட்டும், அவர்கள் வியாபாரம் செய்ய தனி இடம் ஒதுக்க வேண்டும். இப்பிரச்சனைகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் மூலம் ரூ.2¼ கோடி வியாபாரிகள் வருமானம் ஈட்டினர்.
    • ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ெரயில்வே துறைக்கு செலுத்தினால் போதுமானது.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் 27 ெரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியா–ளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலை–கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். அதன் மூலம் வருமான அள–வாக ரூ.81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ஈட்டியுள்ளனர்.

    இதேபோல திருநெல் வேலி ரெயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனை–யில் ரூ.28 லட்சத்து 23 ஆயி–ரத்து 71-ம், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 270, திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 405, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனை–யில் ரூ.15 லட்சத்து 43 ஆயி–ரத்து 975,

    திண்டுக்கல்லில் சின்னா–ளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 297, ஸ்ரீவில் லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 655, தென்கா–சியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 210, ராமநாத–புரத்தில் கருவாடு விற்பனை–யில் ரூ.5 லட்சத்து 34 ஆயி–ரத்து 650,

    ராமேசுவரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனை–யில் ரூ.3 லட்சத்து 67 ஆயி–ரத்து 201, மணப்பாறை–யில் முறுக்கு விற்பனையில் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 10, மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 575, காரைக்கு–டியில் செட்டிநாடு நொறுக் குத் தீனிகள் விற்ப–னையில் ரூ.3 லட்சத்து 429, சாத்தூரில் சேவு விற்பனையில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 640 என உள்ளூர் சிறு குறு உற் பத்தியாளர்கள் வருமா–னம் ஈட்டியுள்ளனர்.

    இதன் மூலம் மொத்தத் தில் ரூ.2 கோடியே 18 லட் சத்து 7 ஆயிரத்து 235 வரு–மானம் பெற்றுள்ள உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

    மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மரப் பாச்சி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கை–யில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள்,

    கொடைக்கானல் ரோட் டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட் கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்கு–டியில் விவசாய விளை–பொருட்கள், வாஞ்சி மணி–யாச்சியில் மக்ரூன், மானாம–துரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்பு–கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட் களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல் லது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத் தி–ருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண் டும்.

    உள்ளூர் உற்பத்தியாளர்க–ளுக்கு வாய்ப்பு வழங்க வெளிப்படை தன்மையுள்ள நடைமுறைகள் பின்பற்றப் பட்டு வருகின்றன. இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவா–ளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண்ணப் பம் பெறப்படுகிறது.

    இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவானது, குலுக் கள் முறையில் விண்ணப்பங் களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரெயில் நிலையத் தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ள–லாம்.

    இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரெயில் நிலையங்க–ளில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாக அமைகி–றது. உற்பத்தியாளர்கள் விண்ணப்பத்துடன் ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ெரயில்வே துறைக்கு செலுத் தினால் போதுமானது.

    சிறிய ெரயில் நிலையங்க–ளில் பயணிகள் பயன்பாட் டிற்கேற்ப பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்படு–கிறது. உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பயணிகள் ஆர்வமுடன் வாங்குவதாக–வும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள் ளதாகவும் உள்ளூர் பொருட் கள் உற்பத்தியா–ளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
    • விதிமுறைகளை மீறி எதிரே வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் அரசு திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக தாசில்தார் அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். இதனால் சாத்தான்குளம் பஜார் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    எனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வழிபாதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதற்கென முறையான போக்குவரத்து போலீசார் நியமிககப்படா ததால் அது செயல்படாமல் உள்ளது. அரசு பஸ்கள், மினி பஸ்கள் முறையாக பயன்படுத்தினாலும், விதிமுறைகளை மீறி எதிரே வரும்லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    முகூர்த்த நாள், விழா காலங்களில் அதிக வாகனங்கள் பஜார் பகுதியில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. எனவே இதனை தடுகக வாகனங்களை சாலை ஓரங்களிலும், ஒதுக்குப்பு றான இடங்க ளிலும் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியா பாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
    • நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவள்ளூர்:

    தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2023 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 1207 பேருக்கு முதல் தவணையில் ரூ.10 ஆயிரம் வீதமும், இரண்டாவது தவணையில் 297 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம்,3-வது தவணையாக 13 பயனாளிகளுக்கு ரூ.50ஆயிரம் வீதம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 742 விண்ணப்பங்கள் வங்கிகளிடமிருந்து திரும்ப பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்களை மீண்டும் கடன்பெறும் வகையில் தயார் செய்ய திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமுதாய அமைப்பாளர் சாந்தி-7010270560, சமுதாய வளபயிற்றுனர்கள் நாகேஷ்வரி-8608242774, சகிலா-7397133219 ஆகியோரின் எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று மீண்டும் பதிவேற்றம் செய்ய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது.இதில் மகளிர் உதவி திட்ட அலுவலர், பெரியநாயகம். நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×