என் மலர்

  நீங்கள் தேடியது "plastic bag"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறு, குறு உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நெகிழிப் பையில் போட்டு தருகின்றனா்.
  • பன்னாட்டுப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் சண். ராமநாதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்தித்து பேசினார்.

  பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  சிறு, குறு உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நெகிழிப் பையில் போட்டு தருகின்றனா். இதுதொடா்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. உற்பத்தி பொருள்களின் கவரிலேயே குறியீட்டு பெயா் இருக்க வேண்டுமானால், குறைந்தது ரூ. 50 லட்சம் முதலீடு செய்தால்தான் தொழில் செய்ய முடியும். இதை மகளிா் சுய உதவிக் குழுவினா், சாதாரண உற்பத்தியாளா்களால் செய்ய முடியாது.

  பெரு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

  பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு ஆதரவாகவும், உள்ளூா் நிறுவனங்களுக்கு எதிராகவும் செயல்பட்டால், உள்நாட்டு வணிகம் முழுமையாக முடங்கிவிடும். எனவே, இச்சட்டத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்.

  சுழற்சி முறையில் 75 மைக்ரான் நெகிழிக்கு ஸ்டிக்கா் ஒட்டி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அதில், அச்சிட்டுத்தான் விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறினால், எங்களால் இயலாத விஷயம். எங்களுக்கு உத்தரவிடும் அரசு, பன்னாட்டுப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், காா்ப்பரேட் நிறுவனங்களால்தான் வாழ முடியும்;

  சாமானிய வணிகா்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்.

  தஞ்சை வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடை வியாபாரிகளுக்கு சிறு, சிறு பிரச்னைகள் உள்ளன. இதை சரி செய்து தருவதாக மேயா் கூறியுள்ளாா்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அப்போது, மேயா் சண். ராமநாதன், பேரமைப்பு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு.
  • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

  அரவேணு

  நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவி ன்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கோத்தகிரியில் உள்ள கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொ ண்டனர்.

  மார்க்கெட் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். சில வியாபாரிகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரி யவந்தது. இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அரவேணு பஜாரில் தாசில்தார் காயத்ரி தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

  கோத்தகிரியில் 4½ கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் அல்லது கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பைகள், கவர்கள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவர்னர் மாளிகைக்குள் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. #PlasticBagBan #Governor #BanwarilalPurohit
  சென்னை:

  சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பார்வையாளர்களுக்காக புகைப்பட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திறந்துவைத்து, அங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.

  இதனைத்தொடர்ந்து, கவர்னர் மாளிகை வளாகத்தை பிளாஸ்டிக் பைகள் இல்லா வளாகமாக மாற்றும் நோக்கத்தில் ‘பிளாஸ்டிக்கை தவிர்த்து புற்றுநோயை தடுப்போம்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை கவர்னர் வெளியிட்டார். கவர்னர் மாளிகையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு துணிப்பை மற்றும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது.

  கவர்னர் மாளிகைக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

  முன்னதாக, கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் 79 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை கவர்னர் வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சிகளில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். #WorldEnvironmentDay #AnbumaniRamadoss
  சென்னை:

  பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் ஜூன் 5-ந் தேதி கூட்டப்பட்டது. இதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. சபை முன் வைத்துள்ளது. ஐ.நா. சார்பில் 2018 உலக சுற்றுச்சூழல் நாளை கடைபிடிக்கும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்திலிருந்து நாட்டின் எல்லா நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பிரசார இயக்கத்தை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், ஓராண்டு காலம் கடந்த பின்னரும் இன்னமும் கூட சட்டவிதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன. இதேபோன்று இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் தொடங்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரமும் வாய்ப்பேச்சாக முடிந்துவிடக்கூடாது. தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளையும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளையும் முழுமையாக செயல்படுத்தவேண்டும்.  கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பழக்கத்தை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பையை கொண்டு செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பை கலாசாரத்தை ஒழிக்க உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்கவேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #WorldEnvironmentDay #AnbumaniRamadoss
  ×