search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகள் சாலை மறியல்
    X

    பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியலில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார். 

    வியாபாரிகள் சாலை மறியல்

    • வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என 4 மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த 4 மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதி யாக உசிலம்பட்டி பஸ் நிலையம் உள்ளது.

    1996-ம் ஆண்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் சிதிலமடைந்தது. இதைத் தொடர்ந்து சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    பயணிகள் வசதிக்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. புனரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களை நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன் அறிவிப்பின்றி பஸ் நிலையத்தை மூடியுள்ளதாக குற்றம் சாட்டி பஸ் நிலைய வளாக கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த அய்யப்பன் எம்.எல்.ஏ., வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டார். உசிலம்பட்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் எம்.எல்.ஏ., வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து தடுப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. கால அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×