என் மலர்
நீங்கள் தேடியது "fine"
- 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சாலை பாதுகாப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.
அப்போது விபத்தில் உயிரிழப்பை தடுப்பது, சாலை மேம்படுத்துதல், சிக்னல்களை சீரமைத்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக புதுவையில் ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சாலைகளில் செல்ல வேண்டிய வேககட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட (45கி.மீ.) அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரை, திண்டிவனம் சாலையில் ஜிப்மர் முதல் இந்திராகாந்தி சிலைவரை, கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் முதல் தவளக்குப்பம் வரை நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
முதல் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நவீன கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையும் இணைந்து அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உள்ளனர்.
எனவே இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அடுத்த கட்டமாக மேலும் பல முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
- சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கேத்தி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் பேருராட்சி செயல் அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒருசில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கேத்தி பகுதியில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தினால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கபடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- கோவை மாநகர போலீசார் புதிய நடவடிக்கை
- ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதுதவிர சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலமாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.
வாடகைக்கு வண்டி ஓட்டுபவர்கள் ஓராண்டுக்குள் அபராத தொகையை செலுத்தி விடுகின்றனர். ஆனால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் உடனடியாக அபராதம் செலுத்துவது இல்லை. வாகனத்ைத விற்கும்போதும், பெயர்மாற்றம் செய்யும்போது மட்டுமே நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் தற்போது வாகனஓட்டிகளிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்கும் வகையில், புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இதில் அபராதம் செலுத்துவோரின் செல்போன் எண், எந்த இடங்களில் விதிகளை மீறியதற்கான அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் நிலுவைத்தொகை பாக்கி விவரம் ஆகிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
கோவையில் அபராத நிலுவைத்தொகை செலுத்த வேண்டிய நபருக்கு மேற்கண்ட சாப்ட்வேர் மூலம் செல்போன் அழைப்பு வரும். இதனை சம்பந்தப்ப ட்டவர் எடுத்தால், மறுமு னையில் பேசும் குரல்பதிவு, நீங்கள் இந்த-இந்த இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு இவ்வளவு தொகை அபராதம் விதிக்க ப்பட்டு உள்ளது.
உங்களின் ஒட்டுமொத்த அபராத நிலுவைத்தொகையை உடடியாக கட்ட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகும். கோவை மாநகரில் செல்போன் எண்ணுக்கு குரல் பதிவை அனுப்பி அபராதம் வசூலிக்கும் முறையை அடுத்த சில நாட்களில் அமல்படுத்துவதென போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு செய்வதற்கு டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.
- இரும்பு சக்கரத்தை கழற்றி விட்டு மீண்டும் டயர் சக்கரத்தை மாட்டி கொண்டு சாலைகளில் செல்ல வேண்டும்.
காங்கயம்:
முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் 19- ந் தேதி முதல் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாைலத்துறை, ஊராட்சி ஒன்றியம் மூலம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
முத்தூர், நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு செய்வதற்கு டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் நெல் நாற்று நடவு உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் உழவு பணிகளை முடித்துக்கொண்டு இரும்பு சக்கரத்துடன் அப்படியே கிராம தார்ச்சாலைகள் மற்றும் பிரதான தார்ச்சாலைகளில் ஓட்டி செல்லப்படும் சூழ்நிலையில் தார்ச்சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விடும். இதுபோன்ற சூழலில் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் வயல்களில் உழவு பணிகளை முடித்துக்கொண்டு வரும்போது கிராம சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் இரும்பு சக்கரத்துடன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே உழவு பணிகளை முடித்தவுடன் டிராக்டரில் இருந்து உடனடியாக இரும்பு சக்கரத்தை கழற்றி விட்டு மீண்டும் டயர் சக்கரத்தை மாட்டி கொண்டு சாலைகளில் செல்ல வேண்டும். மேலும் இரும்பு சக்கரத்துடன் தார்ச்சாலைகளில் ஓட்டிச்செல்லும் டிராக்டர் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் மூலம் அபராதத்துடன் உரிய சட்ட ரீதியான நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
- போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் காலமாக, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் சந்தேகப்படும் படியான நபர்களை சுவாச பரிசோ தனை கருவி (பிரீத் அனலை சர்) மூலம் பரிசோதனை செய்து, மது அருந்தி வாகனம் ஓட்டினால், அவரது புகைப்படத்துடன், கோர்ட்டுக்கு சார்ஜ்சீட் அனுப்பி வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
இத்திட்டம் ஏற்கனவே இருந்தாலும், இரவுநேர விபத்தை தடுக்கும் பொருட்டு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால்ரமேஷ் உத்தர வின் பேரில், காரைக்கால் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மரிகிறிஸ்டியன் பால் மற்றும் போக்குவரத்து போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். இந்த பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேக மாக வும் வாக னம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள னர்.
- தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது
- வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு அந்த தம்பதி பஸ்சை சிறை பிடித்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் காவல்பிறை தெருவை சேர்ந்தவர் அருண்மணி. இவர் இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாளையில் இருந்து டவுனுக்கு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வண்ணார் பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் பாளையங் கால்வாய் அருகே வந்த போது, புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் நோக்கி வந்த தனியார் பஸ் அதிவேகமாக வந்தது.
அப்போது தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இது போல் 2 முறை மோது வது போல் பஸ் இயக்கப் பட்டதால், அச்சமடைந்த அந்த தம்பதி வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு பஸ்சை சிறை பிடித்தனர்.
பின்னர் அவர்கள் பஸ்சை அதிவேகமாக ஓட்டிய டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிவேகமாக ஓட்டியது, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் பஸ்சுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நெல்லையில் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதி களையும் ஒழுங்காக பின்பற்று வதில்லை. அதிக ஒலி எழுப்புவதோடு, அதிவேகத்திலும் தொடர்ந்து தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து சாலையில் செல்லும் மக்களை அச்சுறுத்தும் வகையில் தனியார் பஸ்கள் இயக்கப் படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் சமம் என்ற விதியை மீறி நெல்லையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையில் தனக்கு பதில் ஆஜராக ஜூனியர் ஒருவரை வக்கீல் அனுப்பினார்.
- இதனால் அந்த வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.
வழக்கில் ஆஜரான அந்த ஜூனியர், முதன்மை வக்கீல் இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி அந்த ஜூனியருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் வழக்கு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வக்கீலை உடனே ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதனால் சம்பந்தப்பட்ட வக்கீல் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரானார். நேரில் வராததற்கு மன்னிப்பும் கோரினார்.
அப்போது அவரிடம் நீதிபதிகள், தகுந்த முன்னேற்பாடு மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஜூனியர் வக்கீலை அனுப்பி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், உரிய முறையில் நடந்துகொள்ள தவறியதால், சுப்ரீம் கோர்ட் வக்கீல் சங்கத்தில் 2,000 ரூபாயை செலுத்தி அதற்கான ரசீதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த வக்கீலுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
- ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
- சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.
இந்த சோதனையின் மூலம் டிக்கெட் இன்றி பயணித்த 12 ஆயிரத்து 890 பேருக்கு 98.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்தனர். அதே போல முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன்பதிவு பெடடியிலும், 2-ம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்து கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் என முறைகேடாக பயணித்த 8 ஆயிரத்து 454 பேரிடம் இருந்து 40.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படடுள்ளது.
இது போல ரெயில்களில் விதி முறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்து சென்றதாக 27 பயணிகளுக்கு மொத்தம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓ ட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம், முறைகேடாக பயணம், அதிக லக்கேஜ் ஆகிய வற்றிற்காக 21 ஆயிரத்து 271 பேரிடம் இருந்து 1 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 461 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் ரெயிலில் பயணிகள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.
- தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
- போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த கலியனூர் என்ற பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் ஜெகன்பாபு என்பவர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்ற ஆம்னி வேன் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த ஒரு பெண், வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து பற்றி தெரியவந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கலெக்டர் கார்மேகம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில், சங்ககிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது விதிகளைமீறி சாலை ஓரம் நிறுத்தி இருந்த சுமார் 40 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து தினமும் இது போன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
- வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-
புதுவை சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள்கள், கார்களுக்கு ரூ.1,000-மும், வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். இதற்காக புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுவை கடற்கரை சாலை பகுதியில் மணிக்கு 20 கி.மீ. வேகத்திலும், டவுண் பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, சுப்பையா சாலை, அண்ணா சாலை, கடலூர் சாலை (வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் அரியாங்குப்பம் பாலம் வரை), கடற்கரை சாலை முதல் வில்லியனூர் ஆரிய பாளையம் பாலம் வரை, காமராஜர் சாலை , ராஜீவ்காந்தி சிலை முதல் பாண்லே வரை மரப்பாலம் சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
அரியாங்குப்பம் பாலம் முதல் முள்ளோடை சந்திப்பு வரை, ஆரிய பாளையம் பாலம் முதல் மதகடிப்பட்டு எல்லை வரை, முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் கனகசெட்டிகுளம் எல்லை வரை, 50 கி.மீ. வேகம் வரை இயக்கலாம். அதே நேரத்தில் இந்த பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், மார்க்கெட் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.