என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் அதிரடி சோதனை: கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    பண்ருட்டியில் தடை செய்யப்பட்ட 150கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பண்ருட்டியில் அதிரடி சோதனை: கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • பண்ருட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படிநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறையே பயன்படுத்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை வணிக வளாகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதோடு கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது துப்புரவு அலுவலர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் துப்புரவு மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆய்வுப் பணி மேற்கொள் ளப்படும் என்று ஆணை யாளர் மகேஸ்வரி அறிவித்தார்.

    Next Story
    ×