search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manjolai"

    • ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேலும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையிலும் ஒருசில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடியில் மாநகர பகுதி, கடற்கரையோரங்கள் மற்றும் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்து ள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குலசேரகன்பட்டினத்தில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு 68.45 அடியாகவும், சேர்வலாறில் 80.90 அடியாகவும், மணி முத்தாறில் 97.31 அடியாகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது பெய்த லேசான மழை தண்ணீர் இருப்பை அதிகரிக்காவிட்டாலும், பூமியை சற்று குளிர செய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

    • மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது.
    • இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    மேலும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து செல்கின்றனர். சில நாட்களாக மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சூறாவளி காற்றும் வீசுகிறது.

    இந்நிலையில் பலத்த சூறாவளி காற்றால், மாஞ்சோலை ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் திடீரென முறிந்து அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் செல்போன் டவர் சேதமடைந்து அப்பகுதியில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

    உடனடியாக நடவடிக்கை எடுத்து டவரை சரி செய்ய வேண்டுமென தேயிலை தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர். இதேபோல் 2 நாட்க ளுக்கு முன்பு அங்கு சாலையின் குறுக்கே ராட்சத மரமும் முறிந்து விழுந்த நிலையில் அதை அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களே அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உள்ள காக்காச்சி என்ற பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த பூங்கா அமைய இருக்கும் நிலையில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய அரசு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று ஆய்வு செய்தார். அம்பை வனச்சரக அலுவலகர் நித்யா உடனிருந்தார்.பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்களை ஆய்வு செய்த பின்னர் அவர்கள் திரும்பினர். அப்போது வனத்துறை அதிகாரியை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மணிமுத்தாறு சுற்று வட்டார பகுதியை சுமார் 100-க்கும் மேற்பட்ட வர்கள் நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

    அந்த மனுக்களில், வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்தி ரையாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர். மேலும் அவர்களின் நீண்ட நாள் கோரி க்கையான கோவி லுக்கு மின்சாரம் வழங்குவது குறித்தும் மனு அளித்தனர்.

    அப்போது மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள், நகர செயலாளர் முத்துகணேஷ், ஜமீன் சிங்கம்பட்டி ஊரா ட்சி தலைவர் செந்தில்குமார், ஊர் நாட்டாமை சட்ட நாதன், துணை நாட்டாமை மாரியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.

    • மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோ லையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் தேயிலை பொருட்கள் விற்பனை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் தேயிலை பொருட்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று காக்காச்சி அருகே வந்தபோது திடீ ரென பழுதாகி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அரசு பஸ்கள் நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லும் சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அவர்களது அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.

    ஆனால் மற்ற பயன்பாட்டிற்கு பேருந்து வசதி இல்லாததால் நாலு முக்கு, ஊத்து பகுதி மக்கள் அங்கேயே முடங்கினர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் லாரியில் தேயிலை பொருட்கள் ஏற்றி விட்ட தோட்ட மேலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த தேயிலை தோட்ட நிர்வாகம் சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

    • மணிமுத்தாறு பகுதியில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • சேதமடைந்த சாலையால் பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2 பட்டாலியன் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாலியன் போலீசார் பயிற்சி பெறும் பள்ளி உள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், பேரூராட்சி அலுவலகமும் உள்ளது.

    மேலும் மணிமுத்தாறு பகுதியில் மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவி மற்றும் அணை உள்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் மணிமுத்தாறில் இருந்து பாபநாசம், அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இந்த சேதமடைந்த சாலையை பயன்படுத்தி வரும் பட்டாலியன் போலீசார், சுற்றுலா பயணிகள், பள்ளி செல்லும் குழந்தைகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலை ஓரங்களில் உள்ள ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் இந்த சாலை மேலும் சேதமடைந்து வருகிறது.

    இந்த சாலையால் ஏராளமான பட்டாலியன் போலீசார், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.மேலும் இந்த சாலையில் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் இந்த சாலையை அரசு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • வனத்துறையினர் வாகனத்தில் செல்ல முதலில் வரும் 25 சுற்றுலா பயணிகள் மட்டுமே அழைத்து செல்லப்பட்டனர்.
    • மாஞ்சோலை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் அம்பை வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து செல்லலாம்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் கார்கள் உள்ளிட்ட வாகனங்க ளில் செல்வதற்கு அனுமதிக்கப்ப டுகின்றனர்.

    மேலும் வனத்துறை யினரின் சிறப்பு வாகனம் மூலமும் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். அவ்வாறு வனத்துறையினர் வாகனத்தில் செல்ல முதலில் வரும் 25 சுற்றுலா பயணிகள் மட்டுமே அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அதன்பிறகு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்தநிலையில் அனைவரும் மாஞ்சோலைக்கு சென்றுவரும் வகையில் வனத்துறை சார்பில் 10 மற்றும் 22 சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லக்கூடிய 2 வாகன ங்கள் வனத்துறை மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

    மாஞ்சோலை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் இந்த வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தி சுற்றுலா செல்லலாம் அல்லது அம்பை வனச்சரக அலுவலகத்தில் 04634 252594-ஐ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து செல்லலாம். 

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.

    இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இது சுற்றுலா தளமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பஸ்கள், மருத்துவ வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி பழுதடைகின்றன. மேலும் இந்த மோசமான சாலையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் இப்பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    இதனால் அப்பகுதி கவுன்சிலர், சமூக ஆர்வலர்கள் சாலையை சீரமைக்கக்கோரி முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து மனு அளித்த நிலையில், விரைவில் சாலை அமைப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த சாலையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அவதியடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊத்து எஸ்டேட்டை சேர்ந்த 11 -வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் தலைமையில் ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 50 பேர் இணைந்து ஊத்து பகுதியில் இருந்து நாலுமுக்கு நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் உள்ள குண்டு, குழிகளை மணலால் மூடி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.

    கவுன்சிலர் தலைமையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட இந்த செயலை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • அடர் வனப்பகுதி என்பதால் இங்கு 2 ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொலைதொடர்பு டவர் (பி.எஸ்.என்.எல்.) பழுதடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலா தலங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

    அடர் வன பகுதி

    இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இப்பகுதியை விட்டு வெளியேறி நகர்பகுதியில் சென்று படித்து வருகின்றனர்.

    இந்த பகுதி அடர் வனப்பகுதி என்பதால் இங்கு 2 ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி இப்பகுதி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் தினமும் செல்போனில் பேசி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாஞ்சோலையை அடுத்த நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் அமைந்துள்ள தொலைதொடர்பு டவர் (பி.எஸ்.என்.எல்.) பழுதடைந்துள்ளதால் இப்பகுதிகளில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியே சொல்லமுடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சமீபத்தில் தொழிலாளி ஒருவர் இறந்துவிட்டார். அதனைக்கூட அவரது மகனுக்கு தெரிவிக்க செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை . உடனடியாக தொலை தொடர்பு சேவையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.2லட்சம் மதிப்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • நலிவுற்ற 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள், 17 தையல் மிசின்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மாஞ்சோலையில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போரில் தாமிரபரணியில் உயிர் நீத்த 17 தொழிலாளர்களின் நினைவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரூ.2லட்சம் மதிப்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலிவுற்ற 200குடும்பங்களுக்கு ரூ.2லட்சம் மதிப்பில் அரிசி, மளிகை சாமான்கள், 17 தையல் மிசின்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், தலைமை நிலையச் செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிங் தேவேந்திரன், மானூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சுரேஷ் பாண்டியன், கண்மணி லலிதா, செல்வம், பேராட்சி பாண்டியன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    வனத்துறை அனுமதியின்றி மாஞ்சோலையில் இரவில் தங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    நெல்லை:

     அம்பை புலிகள் காப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
     
    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சாலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வனத்துறை அனுமதி பெற்று சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். 

    அவர்கள் காலை முதல் மாலைவரை மாஞ்சோலையை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் அங்கு தங்க அனுமதி கிடையாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

    கடந்த 28-ந் தேதி மாஞ்சோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி இரவில் அங்கு தங்கி மறுநாள் 29-ந் தேதி மாலை மாஞ்சோலை சோதனை சாவடிக்கு திரும்பி வந்தனர். 

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கு காலதாமதமாக வந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×