என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manjolai Estate"

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும்,.
    • உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக் கோரிய கிருஷ்ணசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    அம்பை மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கு செல்ல வாகன நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    அம்பை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம் அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் புலிகள் காப்பகமும் உள்ளது. இங்குதான் மாஞ்சாலை தேயிலை தோட்டமும் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்து செல்வார்கள். தற்போது அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தையும் ஏராளமானவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்கள் பசுமை போர்த்தி மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதன் அழகை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். இங்கு செல்ல வேண்டுமானால், அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியில் உரிய கட்டணத்தை செலுத்தி செல்ல வேண்டும்.

    இதற்கு முன்பு மாஞ்சோலை செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, தற்போது ரூ.950 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும், மணிமுத்தாறு அருவியில் குளிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அங்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. 
    ×