search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாஞ்சோலையில் குண்டும், குழியுமான சாலையை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்த கவுன்சிலர்
    X

    சாலையை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்த கவுன்சிலர். 

    மாஞ்சோலையில் குண்டும், குழியுமான சாலையை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்த கவுன்சிலர்

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.

    இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இது சுற்றுலா தளமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பஸ்கள், மருத்துவ வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி பழுதடைகின்றன. மேலும் இந்த மோசமான சாலையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் இப்பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    இதனால் அப்பகுதி கவுன்சிலர், சமூக ஆர்வலர்கள் சாலையை சீரமைக்கக்கோரி முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து மனு அளித்த நிலையில், விரைவில் சாலை அமைப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த சாலையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அவதியடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊத்து எஸ்டேட்டை சேர்ந்த 11 -வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் தலைமையில் ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 50 பேர் இணைந்து ஊத்து பகுதியில் இருந்து நாலுமுக்கு நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் உள்ள குண்டு, குழிகளை மணலால் மூடி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.

    கவுன்சிலர் தலைமையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட இந்த செயலை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×