என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாட்டுக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ள காட்சி.
ராதாபுரம் அருகே மாட்டுகழிவுகளை கொட்டிய லாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து மாட்டுகழிவுகள் கொண்டு வந்து ராதாபுரம் அருகே கொட்டிய லாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம், பஞ்சாயத்து பகுதியில் கேரளாவில் இருந்து மாட்டு கழிவுகளை ஒரு லாரியில் ஏற்றி வந்து கொட்டி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை போலீசாருக்கு கூறினார். உடனடியாக ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் அங்கு விரைந்து சென்று அந்த லாரியை மடக்கினார். இதனால் கழிவுகள் மேலும் கொட்டப்படாமல் தடுக்கப்பட்டதோடு, கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் லாரியில் ஏற்றி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் அங்கு கழிவுகளை கொட்டியதற்காக லாரிக்கு பஞ்சாயத்து சார்பாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story