ரூ.11.51 லட்சம் அபராதம்

மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.11.51 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது.
ரூ.11.51 லட்சம் அபராதம்
Published on

மதுரை

மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மேலக்கரந்தை, முத்துலாபுரம், தூத்துக்குடி டவுன், திருச்செந்தூர், குரும்பூர், கோவில்பட்டி, நாகலாபுரம், புதூர், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், மணப்பாடு ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொ ண்டு, ரூ.71 ஆயிரம் அபராதம் செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.11 லட்சத்து 51 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com