ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல்

மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல்
Published on

மதுரை

மதுரை மண்டல அமலாக்க ப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, கொங்கனாகுறிச்சி என்.சுப்பலாபுரம், செங்கமலநாச்சியார்புரம், வத்திராயிருப்பு, முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.55 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சில வாடிக்கையாளர்கள் மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டு ரூ.38 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர்.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளரின் 94430-37508 செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com