search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பஜாரில் வாரச்சந்தை கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை
    X

    உடன்குடி பஜாரில் வாரச்சந்தை கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை

    • விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், வாழை, கருப்பட்டி போன்ற பல்வேறு பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
    • வாரச்சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் தற்காலிகமாக தெற்கு பஜாரில் ரோட்டின் இருபுறமும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வளாகம் உடன்குடி மெயின் பஜாரில் நான்கு சந்திப்பு இடத்தில் சுமார் 10 பரப்பளவில் உள்ளது.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் கூடும் இந்த வார சந்தையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரு வியாபாரிகள் வந்து செல்வார்கள். சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை 8 மணி முதல் இரவு 9மணி வரை தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், வாழை, கருப்பட்டி போன்ற பல்வேறு பொருட்களை நேரடியாக கொண்டு வந்து, விற்பனை செய்வார்கள். தற்போது இந்த வார சந்தை புதிய வடிவத்தில் கட்டும் பணி தொடங்கி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாரச்சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் தற்காலிகமாக தெற்கு பஜாரில் ரோட்டின் இருபுறமும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    சாலையோரம் கடை வைத்து கடும் அவதிப்படு வதாகவும், உடனடியாக வார சந்தை வளாகத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்றும் வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×