என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower Shops"

    • ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் ஏற்பாடு.

    மதுரை ரெயில் நிலையத்தில் முதன்முறையாக பூக்கடைக்கு தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, மதுரை ரெயில் நிலையத்தில் மதுரையின் பிபலமாக மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    அதன்படி, மிகவும் பிரபலமான மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் விற்பனை தொடங்குகிறது.

    இதனால், மதுரைக்கு வரும் மக்கள் ஊரின் சிறப்பம்சமான மதுரை மல்லிகையை சிரமமின்றி வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    • ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.
    • பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. பின்னர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த பூக்கடைகள் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் வீரராகவப்பெருமாள் கோவில் பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த பூக்கடை வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. மேலும் காட்டன் மார்க்கெட் வளாகத்திலேயே பூ மார்க்கெட் செயல்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து காட்டன் மார்க்கெட் பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் கடைகள் அனைத்தும் தொடர்ந்து இதே வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வாசலில் பூக்கடை நடத்தி வருபவர் கண்ணன். இவரது கடையில் சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கடைக்கு தேவையான பூக்களை வாங்கிக் கொண்டு டவுனுக்கு சென்றார். பின்னர் நெல்லையப்பர் கோவில் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் பார்த்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்தது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×