என் மலர்
உள்ளூர் செய்திகள்

ேமாட்டார் சைக்கிளில் தீப்பற்றி எரிந்த காட்சி
நெல்லையப்பர் கோவில் முன்பு தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.
- மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வாசலில் பூக்கடை நடத்தி வருபவர் கண்ணன். இவரது கடையில் சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கடைக்கு தேவையான பூக்களை வாங்கிக் கொண்டு டவுனுக்கு சென்றார். பின்னர் நெல்லையப்பர் கோவில் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் பார்த்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்தது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.






