search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி
    X

    உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர் சாரல் மழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×