search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem news"

    சேலம், ஆனைமடுவில் மழை அதிக பட்சமாக 42 மி.மீ. பதிவாகியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.   நேற்றிரவும்  கடும்  உஷ்ணம் நிலவியதால் பொது மக்கள் தூங்க முடியாமல் புரண்டு, புரண்டு படுத்தனர்.

    திடீர் மழை 
    இந்த  நிலையில்   சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை பரவலாக  மழை பெய்தது . சேலம் மாநகரில் 6 மணிக்கு தொடங்கிய மழை  40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது .  இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.  மழையை  தொடர்ந்து மாந–கர் முழுவதும்   குளிர்ந்த  சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதே போல வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு பகுதியில் கனமழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
    ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 

    இந்த மலர்க்கண்காட்சியில் மேட்டூர், அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கம் அருகே அனைத்து துறையின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளையும் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும் என்றார்.  

    இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளை நிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றார்.

    விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளும்.ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூர் மலைவாழ் மக்களுக்கும்,உள்ளூர் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார். 

    திறப்புவிழா நிகழ்ச்சியில் அண்ணாபூங்கா ஊழியர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம் போட்டோ எடுத்துக்கொண்ட காட்சி.

    இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ் ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளர் டி.எம்.செல்வகணபதி. ஏற்காடு ஒன்றிய பொருப்பாளர் தங்கசாமி,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாலு, கிளை செயலாளர்கள் ஆட்டோ ராஜா, குணசேகரன்,வைரம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார்.மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    மனைவியை அடித்து உதைத்த கணவன், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள வனிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது37) இவரது மனைவி ரேவதி (27).  சுந்தரம் டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறார் .

    இந்நிலையில் சுந்தரத்திற்கு பவளத்தானுர் பகுதியில் பழக்கடை வைத்து இருக்கும் கண்ணம்மா (35) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சுந்தரம் கண்ணம்மாளின் பழக்க–டையில் இருந்து கொண்டு தனது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார் .

    இந்நிலையில் ரேவதி கணவர் சுந்தரத்தை பல முறை கண்டித்துள்ளார்.இருந்தும் சுந்தரம், கண்ணம்மாள் இருவருக்கும் இடையே பழக்கம் நீடித்து வந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி  கணவரை தேடி பவளத்தா–னுர் பகுதிக்கு வந்துள்ளார்.

    அப்போது சுந்தரமும் ,கண்ணம்மாளும் பழக்கடை–யில் ஒன்றாக வியாபாரம் செய்துகொண்டு இருந்ததை பார்த்த ரேவதி இருவரையும் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த கணவர் சுந்தரமும் கண்ணம்மாளும் இங்கு எதற்கு வந்தாய் என்றுகூறி ரேவதியை அடித்து உதைத்துள்ளனர்.

    இதுபற்றி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் சுந்தரம் மற்றும் கண்ணம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    முத்துமலை முருகன் கோவிலில் மண்டல பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திர கவுண்டன்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையுடன்  முத்துமலை முருகன்  கோவில் கட்டப்பட்டு  கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

    அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகத்தின் இறுதிநாளான 48 நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி காலை சிறப்பு யாகம் செய்யப்பட்டு விநாயகர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம்,   மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. 

    பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    பக்தர்கள் வசதிக்காக ஆறுபடை வீட்டில் உள்ள முருகப் பெருமானின் உருவங்கள்  அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.
    ரெயில்வே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.   இந்த  தொடக்கவிழாவில் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ெரயில்வே அதிகா–ரிகள் உடன் இருந்தனர். 

      டிக்கெட் பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குப–வர்கள், ெரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் அலுவலகத்தில் பணி–புரியும் அலுவலர்கள், கூட்ஷெட்டில் பணிபுரியும் ெரயில்வே தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

     இந்தப் பயிற்சியில்  ெரயில் பயணிகளுக்கு  சேவைகளை எப்படி சிறப்பாக செய்வது, ெரயில் பயணிகளின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்வதைப் பற்றி, பயணிகளின் தேவைகளை நன்றாக அறிந்து அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், கனிவான முறையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது  குறித்து பயிற்சி  அளிக்கப்படுகிறது.
    எடப்பாடி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் திடீரென மாயமானார்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சி, மோட்டூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி இவரது மகள் தமிழரசி(23) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

    இத்தம்பதியினருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 
    இந்நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த தமிழரசி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசி தனது 6 மாத கைக்குழந்தையுடன் திடீரென மாயமானார். 

    கை குழந்தையுடன் மாயமான தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் அவர் கிடைக்காத நிலையில்,கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன தமிழரசியை யாரேனும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்களா? அல்லது அவர் வேறு எதேனும் குடும்ப பிரச்சினைக்காக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நெசவு தொழிலாளி கார் மோதி இறந்தார்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே ஆர்.பெத்தாம்பட்டி பகுதியைசேர்ந்தவர் துரைசாமி(வயது 49) நெசவு தொழிலாளி. இவர் தனது மொபட்டில் பெத்தாம் பட்டியிலிருந்து ஆட்டையாம்பட்டிக்கு சென்றார்.   

    எஸ் பாலம் வளைவில் அவர் ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக  எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பலியான துரைசாமிக்கு சுமதி என்ற மனைவியும், கோபி என்ற மகனும் சாந்தி என்ற மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கு நடந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைசாமியின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தன. இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    பலியான துரைசாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கும் செயல்பாடு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேலம் மாவட்டத்தில்  உள்ள  அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்,  நலிவடைந்த பிரிவினரின்  குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை வகுப்பில் (எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. 
     
    அதன்படி வருகிற கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேருவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு கல்வித்துறை வெளியிட்டது.  விண்ணப்பிப்பதற்கான செயல்முறை  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின்  கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) இணையதளத்தில்   கடந்த  ஏப்ரல் மாதம் 20-ந்தேதி  தொடங்கியது.  

    விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  18-ம் தேதி என அறிவித்து இருந்தது.  அதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு இந்த இணையதளம் வழியாக    விண்ணப்பித்து வந்தனர்.

    இதனிடையே  இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க உரிய ஆவணங்களான  வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,  ஆதார்   உள்ளிட்டவைகள் அரசிடம இருந்து பெறுவதற்கு பல நாட்கள் ஆனதால்   ஏழை, எளிய பெற்றோர் பலர் விண்ணப்பிக்கவில்லை. இது அரசின் கவனத்திற்கு வந்தது.
     
    இதையடுத்து,  தமிழக அரசு, ஏழை, எளிய குழந்தைகளின் நலன் கருதி  விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து உத்தரவிட்டது. அதாவது 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை என 7 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வழங்கியது.  இந்த நிலையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் முறை   நாளை (25-ந்தேதி) யுடன் முடிவடைகிறது.  

    நாளை கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெற்றோர் பலர் ஆர்வமுடன்  விண்ணப்பித்து  வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் வரும் 353 பள்ளிகளிலும் கடந்த ஆண்டை விட விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளன. 
    வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படுமா? என்று அந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி, அருநூற்றுமலை, கல்வராயன்மலை கிராமங்கள், தர்மபுரி மாவட்டம் சேலூர், வேலனூர், பாலக்குட்டை, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களுக்கு முக்கிய மையமாக விளங்குகிறது.

    வாழப்பாடி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து, பட்டம் பயில விரும்பும் மாணவ–மாணவியர், சேலம், ஆத்தூர் , ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. 

    தொலைதூரத்திலுள்ள கல்லுாரிகளுக்கு குறித்த நேரத்திற்குசென்று திரும்ப முடியாமலும், தனியார் கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியரது பட்டம் படிக்கும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது.

    எனவே, வாழப்பாடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 

    எனவே வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி  தொடங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து செயல்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் ரெயில் மீண்டும் இயக்கியதற்கு வணிகர் சங்கத்தினர் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சேலத்திலிருந்து விருதாசலத்திற்கு 2 பயணிகள் ரெயில்  இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 2  ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

    இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

    வணிகர் சங்கத் தலைவர் ரவிசங்கர் கூறும்போது, சேலம்- விருத்தாச்சலம் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஆத்தூர் வழியாக எழும்பூருக்கு பகல் நேரம் சென்னை செல்ல புதிய ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். பெங்களூர் காரைக்கால் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

    சேலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ரத்தினவேல் காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). இவருடைய மகன் மணி (37). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
     
    சுப்பிரமணியின் மனைவி இறந்த நிலையில்  இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணி தறிதொழிலாளியாகவும், மணி சமையல் கலைஞராகவும் வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம்  உள்ளதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
     
    வழக்கம்போல் நேற்று இரவு  அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் சுப்பிரமணி ஆவேசத்துடன் மகனை கட்டையால் சரமாரியாக அடித்தார்.   

    இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து இறந்தார்.  இதை அறிந்த ரத்தினவேல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதற்கிடையே சுப்பிரமணி காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
     
    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியை வலைவீசி தேடி வருகிறார்கள். மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    சேலத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்ரோல், டீசலின் தரம் குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.

    பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சண்முகம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் ஊழியர்களிடம் தரத்தின் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
    ×