என் மலர்
நீங்கள் தேடியது "Labor Department"
- கடைகள், உணவு நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.
- விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
விருதுநகர்
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமானகுடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலா ளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்டவிதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 38 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
- இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.
- எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும்.
விருதுநகர்
சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது எடைய ளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரை யிடாமல் வியாபார உப யோகத்தில் வைத்திருந்த ஒரு வியாபாரி மீதும், எடைய ளவுகள் மறுமுத்திரை யிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 மீதும், தராசின் எடையை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 2 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மறுமுத்திரையிடப்படாத 8 மின்னணு தராசுகள், 1 சி விட்ட தராசு, 2 மேசைத் தராசுகள் மற்றும் 20 இரும்பு எடைக்கற்கள் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்ட முறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
இறைச்சி, மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும். எனவே இறைச்சி மற்றும் மீன் கடை வணிகர்கள் எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவ டிக்கையை தவிர்க்க வேண்டும்.
நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்), 1/13சி ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இணைந்து இந்த கூட்டாய்வை மேற்கொண்டனர்.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.
- விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏ.ஐ.யூ.டி.யூ.சி. வலியுறுத்தல்
- பாதிக்கப்படுவோர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் புகார் செய்து தீர்வு காண நம்பிக்கையோடு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பல்வேறு பகுதிகளில் தொழிற்பே ட்டைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொன்றிலும் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியா ற்றும் தொழிலாளர்களுக்கு நலச்சட்ட சலுகைகள், உரிமைகள் அளிப்பதில்லை. பாதிக்கப்படுவோர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் புகார் செய்து தீர்வு காண நம்பிக்கையோடு வருகின்றனர்.
ஆனால் தொழிலாளர் துறை அதிகாரிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. இங்கு 3 ஆண்டாக நிரந்தர ஆணையர் நியமிக்கவில்லை. துணை ஆணையரும் பணியில் இல்லை. அங்குள்ள அதிகாரிகள் பணிகளை சரியாக செய்வதில்லை. தொழிலாளர் துறையின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். துறையில் 100 பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் துறை முதலாளிகள் துறையாக மாறிவிட்டது. இங்கு நிரந்தர ஆணையரை நியமிக்க வேண்டும். தொழிலாளர் துறையை செயல்படும் துறையாக அரசு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்ரோல், டீசலின் தரம் குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சண்முகம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் ஊழியர்களிடம் தரத்தின் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.






