search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளர் துறைக்கு நிரந்தர ஆணையர் நியமிக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    தொழிலாளர் துறைக்கு நிரந்தர ஆணையர் நியமிக்க வேண்டும்

    • ஏ.ஐ.யூ.டி.யூ.சி. வலியுறுத்தல்
    • பாதிக்கப்படுவோர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் புகார் செய்து தீர்வு காண நம்பிக்கையோடு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பல்வேறு பகுதிகளில் தொழிற்பே ட்டைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொன்றிலும் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியா ற்றும் தொழிலாளர்களுக்கு நலச்சட்ட சலுகைகள், உரிமைகள் அளிப்பதில்லை. பாதிக்கப்படுவோர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் புகார் செய்து தீர்வு காண நம்பிக்கையோடு வருகின்றனர்.

    ஆனால் தொழிலாளர் துறை அதிகாரிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. இங்கு 3 ஆண்டாக நிரந்தர ஆணையர் நியமிக்கவில்லை. துணை ஆணையரும் பணியில் இல்லை. அங்குள்ள அதிகாரிகள் பணிகளை சரியாக செய்வதில்லை. தொழிலாளர் துறையின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். துறையில் 100 பணியிடம் காலியாக உள்ளது.

    இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் துறை முதலாளிகள் துறையாக மாறிவிட்டது. இங்கு நிரந்தர ஆணையரை நியமிக்க வேண்டும். தொழிலாளர் துறையை செயல்படும் துறையாக அரசு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×