என் மலர்
நீங்கள் தேடியது "Training"
- இளநிலை வேளாண்மை மாணவ- மாணவிகள் இணைந்து அசோலா வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி கயத்தாறு வட்டம் கம்மாபட்டி கிராமத்தில் நடத்தினர்.
- தொடர்ந்து கிராம தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல் விளக்கம் மேற்கொண்டு கிராம மக்கள் எளிய முறையில் வளர்த்து லாபம் பெற ஊக்குவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துகுடி மாவட்டம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் காருண்யா பல்கலைகழக 4-ம் ஆண்டு இளநிலை வேளாண்மை மாணவ- மாணவிகள் இணைந்து அசோலா வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி கயத்தார் வட்டம் கம்மாபட்டி கிராமத்தில் நடத்தினர்.
முதுநிலை விஞ்ஞானியும், ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் தலைவரமான பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் முருகன், முத்துகுமார், வேல்முருகன், மாசாணச்செல்வம், கால்நடை மருத்துவர் ஆனந்த் மற்றும் பண்ணை மேலாளர் தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் மாணவ -மாணவிகள் ஆல்ட்ரின், அய்யப்பன், அலோசியா, கார்த்திகா, கீர்த்தனா, ஹரினி ஆகியோர் அசோலா- கால்நடைகளுக்கு அதிக சத்துள்ள தீவனம் என கூறி அதன் பயன்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து கிராம தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல் விளக்கம் மேற்கொண்டு கிராம மக்கள் எளிய முறையில் வளர்த்து லாபம் பெற ஊக்குவித்தனர்.
- 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
- 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.
சென்னை:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.
இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.
முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா. இவர்கள் 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி முடித்து உள்ளார்கள். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
கோவில்களில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆண்-பெண் பேதம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆர்வப்படும் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை கூறுகிறது. தற்போது பயிற்சி பெற்றுள்ள 3 பெண்களும் 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.
பயிற்சி முடித்துள்ள 3 பேரும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு தேவைப்படும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
- ஒளிா் மஞ்சள் நிறத்தில் தோன்றி காலப்போக்கில் விலா எலும்புகள்போல காட்சியளிக்கும்.
- பயிரினை பாதுகாத்திடவும் வேண்டும் என்றாா்.
திருப்பூர்:
பல்லடம் அருகே பொங்கலூரில் தென்னை வாடல் நோய் குறித்து வேளாண்மை அலுவலா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பொங்கலூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், திருப்பூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்கள், வேளாண்மை அலுவலா்கள், துணை வேளாண்மை அலுவலா்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா். வாணி வரவேற்றாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை பேராசிரியா் ஜான்சன், தென்னை மரத்தை தாக்கும் அடித்தண்டு வாடல் நோய் மற்றும் தென்னை வோ் வாடல் நோய் குறித்து பயிற்சியளித்தாா்.
வாடல் நோய் தாக்கப்பட்ட தென்னை மர மட்டையின் நடு அடுக்குகள் ஒளிா் மஞ்சள் நிறத்தில் தோன்றி காலப்போக்கில் விலா எலும்புகள்போல காட்சியளிக்கும். பின்னா் பூங்கொத்து கருகுதல் நடுக்குருத்து அழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தென்னை மரங்கள் காய்ந்து மகசூல் பாதிக்கும். இந்த வாடல் நோய் கண்ணாடி இறக்கை பூச்சி (ஸ்டெபானிடிஸ் டிபிகா), தத்துப்பூச்சி (புரோடிஸ்டாமோயஸ்டா) ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்கு பவுடா் 200 கிராம் அல்லது பிப்ரோனில் 0.3ஏ குருணையை மணலுடன் 1:1 என்ற விகித்தில் கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இடவேண்டும் என தெரிவித்தாா்.
தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை பேராசிரியா் மருதாசலம் பேசியதாவது:-
ஒரு மரத்துக்கு ஓா்ஆண்டுக்கு வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பா் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஸ் 3.5 கிலோ என்ற அளவில் இட வேண்டும். தென்னை டானிக் 40 மில்லி, 160 மில்லி தண்ணீருடன் கலந்து வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை கட்ட வேண்டும். மேலும் உயிரியல் காரணிகளான டி-விரிடி 100 கிராம், பேசிலஸ் 100 கிராம், அசோஸ்பைரில்லம் 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா 100 கிராம் மற்றும் வோ் உட்பூசனம் 50 கிராம் ஆகியவற்றை 5 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வருடத்துக்கு ஒரு மரத்துக்கு இரண்டு முறை இட வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உற்பத்தி செய்யப்படும் கோகோகான் என்ற நுண்ணுயிா் கலவையை ஒரு ஏக்கருக்கு 5 லிட்டா் அளவில் 2-3 மாத இடைவெளியில் தென்னையில் வோ்ப்பகுதியில் ஊற்ற வேண்டும் என்றாா்.
திருப்பூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் சுருளியப்பன் பேசுகையில், மாவட்டத்தின் பிரதான பயிராக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருவதால் தொழில்நுட்ப அலுவலா்கள் அனைவரும் பயிற்சியில் தெரிவிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி தென்னை மகசூல் அதிகரிக்கவும், பயிரினை பாதுகாத்திடவும் வேண்டும் என்றாா்.தென்னையில் வரும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா் கலையரசன் தொழில்நுட்ப அலுவலா்களுக்கு பயிற்சியளித்தாா்.
முடிவில் பொங்கலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பொம்மராஜு நன்றி கூறினாா்.
- 2-ம் நிலை காவலர்-தீயணைப்பாளர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெறுகிறது
- பெரம்பலூரில் 11-ந்தேதி தொடங்குகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை நாடும் இளைஞர்கள் படித்து பயன் பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இவ்வட்டத்தின் சார்பாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,359 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற 17-ந்தேதி இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு 18 வயது முதல் 26 வயது வரை ஆகும். வயது வரம்பு சலுகை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 28 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் 31 வயது, ஆதரவற்ற விதவை 37 வயது, முன்னாள் ராணுவத்தினர் 47 வயது ஆகும். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணியளவில் நேரடியாக தொடங்கப்படவுள்ளது. எனவே இத்தேர்விற்கு, தயாராகி கொண்டிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் தங்களின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9499055913 என்ற செல்போன் எண் மூலமாகவோ அணுகி பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து பயிற்சி அளித்தனர்.
- இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் உழவன் செயலி பற்றிய முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு இயக்குவது பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
சின்னாளப்பட்டி:
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் 6 மாத காலம் கிராமங்களில் தங்கி விவசாயிகளை நேரில் சந்தித்து பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக மாணவர்கள் அருண்குமார், விஷ்வா, அரவிந்த், அஸ்வின், நிவேதன், கனிஷ்கர் ஆகியோர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள மாங்கரை, அம்மாப்பட்டி ஆகிய கிராமங்களில் தங்கி விவசாயிகளோடு இணைந்து பல்வேறு வகையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
இப்பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை அதிகளவு தாக்கும் படைப்புழுவை எவ்வாறு இயற்கையான முறையில் கட்டுப்படுத்தி தடுக்கும் வழி முறைகள் பற்றியும், வேதி உயிர்கொல்லி மருந்துகளை குறைப்பது பற்றியும், மண்ணின் ஊட்டச்சத்தை சிதைக்காமல் மண்ணை நிலையாக பாதுகாப்பது உள்ளிட்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு மாணவர்கள் அளித்தனர்.
இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் உழவன் செயலி பற்றிய முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு இயக்குவது பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
- சிறு தொழில் குறித்து பெண்களுக்கு பயிற்சி நடந்தது. கரூர்
- பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கரூர்
தரகம்பட்டி அருகே உள்ள வரவணை ஊராட்சி மற்றும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிறந்தநாள் கேக், முறுக்கு, பிஸ்கட் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து சிறு தொழில் பயிற்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான சிறு தொழில் பயிற்றுனர் திருச்சி பொன்செல்வி கலந்து கொண்டு பயிற்சிகள் அளித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதன் மூலம் தன்னிறைவு பெற்ற குடும்பங்கள் உருவாகி நிலையான வருமானம் மற்றும் நீடித்த வளர்ச்சி அடைந்து சமூகத்தில் மறுமலர்ச்சி உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற செயலாளர் வீராச்சாமி, பசுமைக்குடி தன்னார்வலர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
- வேளாண் திட்டங்கள் குறித்து
கரூர்
கரூர் தரகம்பட்டி அருகே உள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது. இதற்கு கடவூர் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். விதை சான்றளிப்புத்துறை வேளாண்மை உதவி இயக்குனர் கவுதமி முன்னிலை வகித்தார்.
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், மண் வளங்களை அதிகரிக்க செய்வது, நவ தானியங்கள், தொழு உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இணைய வழி பாரம்பரிய விவசாயிகள் குழு பதிவு செய்தல், சான்றுகள் பெறுதல் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முத்தமிழ்செல்வன், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் கவியரசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சரண்யா நன்றி தெரிவித்தார்.
- இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- வேலைவாய்ப்பற்றவர்களுக்கு
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கீழப்பழூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆண்களுக்கான செல்போன் சர்வீஸ் பயிற்சி, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சி, எலக்ட்ரிக்கல்-மோட்டார் ரீவைண்டிங் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செய்முறை பயிற்சி, சீருடை, 3 வேளையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திறன்வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சியில் சேர நாளை (திங்கட்கிழமை) நேர்காணல் நடத்தப்படும். 7-ந்தேதி பயிற்சி தொடங்கும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்தால் போதும். ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல், 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 கொண்டு வர வேண்டும். இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944850442, 7539960190 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெரம்பலூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி தொடக்க விழா நடந்தது
- புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே வடக்குமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி தொடக்க விழா நடந்தது.
பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தேவகி தலைமை வகித்தார். புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன் தொடங்கி வைத்து பேசினார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் ரமேசு கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை, நீங்களும் எளிதில் கற்றுக்கொ ள்ளலாம் என தெரிவித்தார். வடக்குமாதேவி பள்ளி ஆசிரிய பயிற்றுநர் சுப்ரமணியன் அனைத்து கற்போர்களும் முதல் நாள் உள்ள ஆர்வம் போல் தொடர்ச்சியாக வந்தால் மட்டுமே நமது இலக்கை எட்ட முடியும் என்று தெரிவித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் சசிநர்மதா வரவேற்றார். முடிவில் பள்ளியின் இடைநிலையாசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.பயிற்சிபயிற்சி
- உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- வெளி நாடுகளில் பயில விரும்பு வராக இருக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது -
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் வெளிநாடு சென்று உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை வெளி நாடுகளில் பயில விரும்பு வராக இருக்க வேண்டும். குடும்ப வரு மானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும் வெளி நாடு களிலுள்ள கல்வி நிறு வனத்தில் மேல் படிப்பி னை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.