search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை"

    • தென்னை விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    திருவில்லிபுத்தூரில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னையில் அறிவியல் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் தனலட்சுமி வரவேற்றார். தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னையில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள், காப்பீடு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் காப்பீடு, நலத்திட்டங்கள், குறித்து பேசினார்.

    பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் வீரபத்திரன் தென்னை சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை குறித்து பேசினார். பேராசிரியர் தங்கபாண்டியன் தென்னை ரகங்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், வேளாண் விற்பனை துறை அலுவலர் மகாலட்சுமி, தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்வது குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை குழு கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி, இ-நாம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தென்னை நார் தொழில் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
    • வங்கிகளில் என்.பி.ஏ., வகை கடன் தவணை செலுத்தும் நாளை 90ல் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.

    கோவை,

    மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ்கோயல் தலைமையிலான ஆய்வுக் கூட்டம், புதுடெல்லியில் நடந்தது. இதில் தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரையை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வது, நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.ஆய்வுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி, சந்திரகேகர் எம்.பி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் காந்தி, நாகராஜன், தாஜுதீன், முகமது நூருல்லா, சண்முகசுந்தரம், பத்மநாபன் ஆகியோர் மத்திய அமைச்சரிடம் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கு, ரஷ்யா- உக்ரைன் போர், பண மதிப்பு மற்றும் பொருளா தார நிலையி ன்மை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி பொருட்க ளின் விலை குறைவு போன்ற காரணங்க ளால் தென்னை சார் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் எண்ணற்றோர் கயிறு கம்பெனிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வங்கிகளுக்கும் தவணை தொகை செலுத்த முடிவதில்லை. எனவே வங்கிகளில் என்.பி.ஏ., வகை கடன் தவணை செலுத்தும் நாளை 90ல் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.மேலும் அனுபவம் மிகுந்த ஐ.ஏ. எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீர மைப்பதுடன், அன்னிய செலவா ணி யை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • நடவு முறை , குழி எடுத்தல், உரமிடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் அமைந்துள்ளது. இங்கு குட்டை நெட்டை இடங்களில் பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் தென்னை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் குறித்தும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இங்கு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 19 விவசாயிகள் திருமூர்த்தி நகர் தென்னை வளர்ச்சி மையத்தில் பார்வையிட்டனர். அங்கு மேலாளர் ரகோத்தமன் தலைமையில் விவசாயிகளுக்கு நாற்றை தேர்ந்தெடுத்தல் ,நடவு முறை , குழி எடுத்தல், உரமிடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தகவலை தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ×