search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காண்டா மிருக வண்டுகளில் இருந்து தென்னையை பாதுகாக்கும் வழிமுறைகள்
    X

    காண்டா மிருக வண்டுகளில் இருந்து தென்னையை பாதுகாக்கும் வழிமுறைகள்

    • வேளாண் இயக்குனர் விளக்கம்
    • புதுகோட்டையில் கோடை காலத்தில் தென்னையை தாக்கும் வண்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 493 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னையில் காண்டா மிருக வண்டுகள் தாக்கு தல் ஜூன் முதல் செப்டம்பர்மாதம் வரை அதிகமாக இருக்கும். நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயதுடைய தென்னை மரங்களையூம் காண்டமிருக வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும்.இதனை கட்டுப்படுத்து வது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இயக்குனர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.தென்னந்தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும். மேலும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம்தெளித்து அதன் புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டுகள் இருந்தால் கம்பி (அல்லது) சுளுக்கியால் அதனைக் குத்தி வெளியில் எடுத்து கொன்றுவிட வேண்டும்.கோடை மற்றும் மழை காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறியினை தென்னந்தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.ரைனோலியூ ர்இன க்கவர்ச்சி பொறியினை 2 எக்டருக்கு 1 எண் வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.வேப்பங்கொட்டை தூளுடன், மணலை 1 : 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்க வேண்டும்.ஒரு மண்பானையில் 5 லிட்டர்நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட உதவும் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×