search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconuts"

    • விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வடக்கு மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

    • வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள செம்மடைபாளையம் அருகே உள்ளது.
    • தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவராக இருப்பவர் வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலை யில் உள்ள செம்மடை பாளையம் அருகே உள்ளது.

    இதில் சுமார் ரூ. 8 லட்சம் தேங்காய்கள் குவிக்கப்பட்டு இருந்தது. தேங்காய் விலை குறைவாக இருப்பதால் தேங்காயை உரிக்காமல் குவிக்கப்பட்டு மேல் தேங்காய் மஞ்சு களை(நார்) போட்டு தேங்காய்களை மூடி வைத்தி ருந்தனர். அதற்கு மேல் தேங்காய்கள் உலராமல் இருக்க தேங்காய் மட்டை களை போட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது. இதனால் தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் மஞ்சு களில்திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தேங்காய் குடோனில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் .இருப்பினும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து வடிவேல் நாமக்கல் தீயணைப்பு துறை யினருக்கும், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு துறையினருக்கும் , ஜேடர்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்டஅலுவலர் வெங்கடாசலம் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள், ஜேடர்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் ஆகிய மூன்று வாகனங்களும் விரைந்து சென்று தேங்காய்களில் வேகமாக எரிந்து கொண்டி ருந்த தீயை சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுதனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.75 லட்சம் மதிப்பிலான சுமார் 8 லட்சம் தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    • அதிக அளவில் காய்கள் உருவாக தென்னை டானிக் என்ற சத்தூட்டத்தை பயன்படுத்தலாம்.
    • தென்னையில் அதிக அளவு மகசூல் பெற உதவும் ஒரு சத்தூட்ட திரவமாகும்.

    தென்னையில் குரும்பை உதிராமல் இருக்கும் போது தான் அதிக அளவு காய்கள் உருவாகிறது. தென்னை மரத்தில் உருவாகும் குரும்பைகள் உதிராமல் தடுத்து அதிக அளவில் காய்கள் உருவாக தென்னை டானிக் என்ற சத்தூட்டத்தை பயன்படுத்தலாம்.

    தென்னை டானிக் என்று கூறப்படும் ஊட்ட சத்து திரவமானது தென்னையில் அதிக அளவு மகசூல் பெற உதவும் ஒரு சத்தூட்ட திரவமாகும். இந்த டானிக்கில் தென்னை மரத்தின் வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீஷியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    இத்துடன் மரத்திற்கு தேவையான ஆக்சிஜன், சாலிசிலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் முதலிய வளர்ச்சி ஊக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த டானிக்கின் கார அமில நிலையானது மரத்தின் கார அமில நிலைக்கு ஏற்ப இருக்குமாறு தயார் செய்யப்பட்டுள்ளது.

    டானிக்கின் கார அமில நிலையானது மரத்தின் கார அமில நிலையை பாதிக்காமல் இருப்பதால் டானிக் மரத்திற்கு எளிதாக ஊடுருவி செல்கிறது. இதனால் மரத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்களும், வளர்ச்சி ஊக்கிகளும் மரத்தின் அனைத்து பாகங்களுக்கும் எளிதாக பரவுகின்றன. இதனால் மரத்திற்கு நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றில் இருந்து இயற்கையான எதிர்ப்பு சக்தி உண்டாகிறது.

    தென்னை மரத்திற்கு சத்து டானிக்கை வேர் மூலம் செலுத்துவதால் பலவிதமான நன்மைகள் உண்டாகின்றன. இலைகளில் பச்சையம் அதிகரித்து ஒளிச்சேர்க்கை மேம்படுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர் வேதியியல் பணிகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் டானிக் மூலம் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் காய்ப்புத் திறன் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டங்களும் ஆக்சின் போன்ற வளர்ச்சி ஊக்கியும் டானிக்கில் கலந்திருப்பதால் குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைக்கப்படுகிறது. காய்களின் எண்ணிக்கையும் பருமனும் உயர்ந்து மகசூல் அதிகரிக்கிறது.

    தென்னை டானிக்கை மரத்திற்கு வேர் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்துவதற்கு சரியான உறிஞ்சு வேர்களை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்கு கீழ் உறிஞ்சு வேர்கள் அமைந்திருக்கும். இந்த வேரில் பென்சில் கனமுள்ள வெள்ளை நிற வேர் ஒன்றை தேர்வு செய்து அதன் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு பயன்படுத்தி சாய்வாக சீவி விடவும். பின்னர் டானிக் உள்ள பையில் அந்த வேரை நுழைத்து பையின் மேல் பாகத்தை வேருடன் சேர்த்து நூலால் கட்டி டானிக் சிந்தாமல் மண் அணைத்து விடவும்.

    மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சி விடும். எனவே, வெயில் நேரத்திலும் மழை அல்லது பாசனத்திற்கு முன்பும் டானிக்கை கட்டிவிட்டால் வேர் விரைவாக உறிஞ்சி விடும். தென்னை மரங்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை வேர் வழியாக ஊட்ட மருந்து டானிக்கை செலுத்துவது நல்லது.

    பொதுவாக ஒரு மரத்திற்கு 200 மில்லி என்ற அளவுக்கு டானிக்கை செலுத்த வேண்டும். இந்த டானிக் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு சீலிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் விவசாயிகள் எளிதில் இந்த டானிக்கை கொண்டு செல்லும் வகையில் அடர் திரவமாக 2 லிட்டர், 10 லிட்டர் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதுபோன்ற கேன்களில் விற்பனை செய்யப்படும் அடர்திரவத்தை டானிக்காக மாற்ற சில உத்திகளை கையாள வேண்டும். அதாவது, 10 லிட்டர் அடர்திரவத்துடன் 40 லிட்டர் குடிநீர் சேர்த்து 50 லிட்டர் டானிக் தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட டானிக்கை பாலிதீன் பைகளில் 200 மில்லி என்ற அளவில் அடைத்து மரங்களின் வேர்களில் கட்டிவிடலாம்.

    தென்னை ஊட்டமருந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை. ஆனால் இதில் கலந்துள்ள வளர்ச்சி ஊக்கிகளின் வீரியம் நாளடைவில் குறைய வாய்ப்புள்ளதால் டானிக்கை தயாரித்த 30 நாட்களுக்குள் மரங்களுக்கு பயன்படுத்துவது நல்லது.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்து தேங்காய் விற்பனை நடைபெற்றது
    • லோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுக்கு விற்பனையானது

    எழுமாத்தூர்,

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 245 எண்ணிக்கையிலான 12 ஆயிரத்து 158 கிலோ எடைகொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுகள், அதிகபட்ச விலையாக 23.39 காசுகள், சராசரி விலையாக 22.55 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது.

    • வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
    • பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது.

    சேலம்:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது. இதில் ஒரு குவிண்டால் தேங்காய் பருப்பு குறைந்தபட்சம் ரூ.7525 முதல் அதிகபட்சமாக ரூ.7828 வரை விற்பனையானது. தற்போது இப்பகுதியில் தொடர் மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில், தேங்காய் பருப்புகளுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
    • குடும்பங்களுக்கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

    இந்த கிராமங்களில் குடும்ப அட்டை வைத்துள்ள, தென்னை மரம் இல்லாத அனைத்து குடும்பங்களுக் கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி தெரிவித்துள்ளார்.

    • தென்னை மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
    • தார்ப்பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அவ்வாறு கொண்டு செல்லும் தென்னை மட்டைகளை உரிய முறையில் பாது காப்பாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் கனரக வாகனங்களில் ஏற்றியபிறகு அதை தார்ப் பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வேகத்தடை மற்றும் குறுகலான சாலை பகுதிகளில் செல்லும்போது தென்னை மட்டைகள் சரிந்து கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

    இதனால் தென்னை மட்டைகளை.ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்களிடம் தேங்காய் குடோன் உரிமையாளர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது
    • விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

     உடுமலை :

    மழை இன்றி வறண்ட வானிலை காணப்படுவதால் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் ஓலைகள் கருகி மரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க முடியாமல் காய் உற்பத்தி திறன் குறைந்து வருகிறது. அரசு பரிந்துரைக்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வெள்ளை ஈ தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தென்னை வருமானம் குறைவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சிலர் கூறியதாவது :- நாட்டு ரக தென்னையை அவ்வளவாக நோய் பாதிப்பதில்லை. உயர்ரக தென்னையை அதிக அளவில் வெள்ளை ஈ தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிலர் உயர் ரக தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு நாட்டு ரகங்களை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அரசு உயர் ரகதென்னையை பயிரிட்டால் அதிக காய் உற்பத்தி கிடைக்கும் என்று பேராசையை தூண்டி விவசாயிகளை படுகுழியில் தள்ளி விட்டது. நோய் பாதித்த பின் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளது. நோய் தாக்கிய மரங்களை வெட்டி விட்டு மறு நடவு செய்து வருமானம் பார்க்கும் வரை ஒரு மரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும். புதிய ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் முன் அரசு பல ஆண்டுகள் சோதனை செய்து வெற்றி அடைந்தால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம் :

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள், ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இவை டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 47 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.10-க்கும், குறைந்தபட்சமாக என ரூ.57.25-க்கும் ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,105 தேங்காய்களும், 13 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டிருந்தது.

    தேங்காய், தேங்காய் பருப்பு 3¼ டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 272-க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • வேளாண் இயக்குனர் விளக்கம்
    • புதுகோட்டையில் கோடை காலத்தில் தென்னையை தாக்கும் வண்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 493 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னையில் காண்டா மிருக வண்டுகள் தாக்கு தல் ஜூன் முதல் செப்டம்பர்மாதம் வரை அதிகமாக இருக்கும். நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயதுடைய தென்னை மரங்களையூம் காண்டமிருக வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும்.இதனை கட்டுப்படுத்து வது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இயக்குனர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.தென்னந்தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும். மேலும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம்தெளித்து அதன் புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டுகள் இருந்தால் கம்பி (அல்லது) சுளுக்கியால் அதனைக் குத்தி வெளியில் எடுத்து கொன்றுவிட வேண்டும்.கோடை மற்றும் மழை காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறியினை தென்னந்தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.ரைனோலியூ ர்இன க்கவர்ச்சி பொறியினை 2 எக்டருக்கு 1 எண் வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.வேப்பங்கொட்டை தூளுடன், மணலை 1 : 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்க வேண்டும்.ஒரு மண்பானையில் 5 லிட்டர்நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட உதவும் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.

    • கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
    • 300 விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவிட்டு தென்னங்கன்றுகளை பெற்று சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் வேளாண் அனுபவ பணிக்காக வந்திருக்கும் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தீபிகா, தம்மஸ்ரீ, தீபிகா, தனுஷா, தர்ஷினி, திவ்யா, திவ்யசரிகா, இலக்கியா, இனிதா, காயத்ரி கிருஷ்ணகுமார் ஆகியோர் வேளாண்மை இயக்குனர் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாமில் கலந்து கொண்டு விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு இரண்டு தென்னம் கன்றுகளை வழங்கினர்.

    இந்த விழாவை வேளாண்மை இயக்குனர் அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தார்.

    வேளாண்மை உதவி அலுவலர் பெட்ரிக் இளையராஜா இந்த முகாமை வழிநடத்தி தென்னங்கன்றுகளை வழங்கினார்.

    இந்தச் திட்டத்தின் கீழ் 300 விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவிட்டு தென்னங்கன்றுகளை பெற்று சென்றனர் .  

    • தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளையம், சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம் பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், அண்ணா நகர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×