search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து அபாயம்"

    • குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது.
    • வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ளது எஸ்.ஆர்.சி. மில். தற்போது எஸ்.ஆர்.சி. மில்லில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சாலையில் திருப்பூரில் இருந்து சென்னை, சேலம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு ஊத்துக்குளி வழியாக செல்லும் ஏராளமான பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்பட இரு சக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து மிகுதியான பகுதியாகும். இப்படிப்பட்ட நிலையில் இந்த பாலத்தின் அடியில் உள்ள சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இந்த பள்ளத்தின் தார் சாலை, வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது. இதனை அறியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வந்து, அந்த பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். இதனால் உடலில் சீராய்ப்பு, ரத்த காயம் ஏற்படுகிறது. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அந்த சாலையின் பள்ளத்தில் விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மழை காலத்தில் அந்த இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மேலும் அதிக அளவில் விபத்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
    • 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன

    வேலூர்:

    வேலூரில் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இரவு மட்டுமல்லாது காலை 9 மணி பனிப்பொழிவு உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போர்வைக்குள் தஞ்ச மடைந்தனர்.

    ஒரு சிலர் சாலையோரங்களில் கட்டைகளை அடுக்கி தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    இந்தநிலையில் வழக்கத்தை விட இன்று காலையிலும் பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். பலர் தலையில் குல்லார மற்றும் ஸ்வெட்டர் அணிந்தபடி நடந்து சென்றனர்.

    சென்னையில் இருந்து ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    இதேபோல் காட்பாடி,வள்ளிமலை, பொன்னை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிபொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் வாக னங்களை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    வேலூர் நகரில் உள்ள மலைகள் மூடுபனியால் கண்களுக்கு தெரியாத வகையில் மூடப்பட்டி ருந்தது. வெயில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன.

    • குளத்துப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி பிரிவு வரை சாலை குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டும், விபத்தில் சிக்கியும் வருகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சியில் குளத்துப்பட்டி, சீத்தாபுரம், வடக்கு விராலிப்பட்டி, தெற்கு விராலிப்பட்டி, எஸ்.தும்ம லப்பட்டி, சேவுகம்பட்டி, சென்ன மாநாயக்கன ்கோட்டை, தம்பிநாயக்க ன்பட்டி, என். ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொது மக்கள், பள்ளி மாணவ- மாணவிகள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் குளத்து ப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி பிரிவு வரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி யளிப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டும், விபத்தில் சிக்கியும் வருகிறது. எனவே குளத்துப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி வரை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. தற்போது, அது நான்கு வழிசாலையாக மாறியுள்ளதால், வாகனங்கள் அதிவிரைவாக செல்கின்றன. இச்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கென தனிப்பாதை ஏதும் அமைக்கப்படவில்லை.

    பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடையும் அமைக்கப்படவில்லை. மேலும், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், பள்ளிக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் அபாய சூழல் இருந்து வருகிறது.

    சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களிலேயே நிறுத்தக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். செங்குத்தாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். 10-அடி ஆழமுள்ள சாக்கடை பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென, மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாழ்வான பகுதியாக மின்கம்பத்தில் இருந்து மின்சார வயர்கள் தொங்கி கிடப்பதால் பேருந்தில் உரசும் அபாயம் உள்ளது.
    • உடனடியாக மின்சார வாரியம் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர இழுத்து கட்ட வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிலையத்தை அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.

    அங்கு காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் என சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    தருமபுரியில் இருந்து வரும் பேருந்துகள் ஒகேனக்கல் புறவழிச் சாலையாக வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வரும்போது அலுவலகத்திற்கு முன்பு தாழ்வான பகுதியாக மின்கம்பத்தில் இருந்து மின்சார வயர்கள் தொங்கி கிடப்பதால் பேருந்தில் உரசும் அபாயம் உள்ளது.

    இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனை உடனடியாக மின்சார வாரியம் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர இழுத்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றன.

    • தென்னை மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
    • தார்ப்பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அவ்வாறு கொண்டு செல்லும் தென்னை மட்டைகளை உரிய முறையில் பாது காப்பாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் கனரக வாகனங்களில் ஏற்றியபிறகு அதை தார்ப் பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வேகத்தடை மற்றும் குறுகலான சாலை பகுதிகளில் செல்லும்போது தென்னை மட்டைகள் சரிந்து கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

    இதனால் தென்னை மட்டைகளை.ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்களிடம் தேங்காய் குடோன் உரிமையாளர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட பாலாஜி நகர் செல்லும் சாலையில் வீரபாண்டி துணைஅஞ்சல் நிலையம் உள்ளது. இந்த அஞ்சல் நிலையத்துக்கு சின்னக்கரை,கரைப்புதூர், ஏ.பி.நகர்.வித்தியாலம், நொச்சிப்பாளையம், அவரப்பாளையம்*வ,ரபாண்டி. பலவஞ்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் இந்த அஞ்சல் நிலையத்துக்கு வந்து செல்கின்றார்கள்.

    இந்தநிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் பாதாளச் சாக்கடை சேதமடைந்துள்ளது.அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் அதற்குள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் அஞ்சல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    ×