search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி சாலையில் ஆபத்தான பள்ளத்தால் விபத்து அபாயம்
    X
    விபத்து ஏற்படுத்தும் வகையில் பெரிதாகியிருக்கும் பள்ளத்தை படத்தில் காணலாம்.

    ஊத்துக்குளி சாலையில் ஆபத்தான பள்ளத்தால் விபத்து அபாயம்

    • குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது.
    • வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ளது எஸ்.ஆர்.சி. மில். தற்போது எஸ்.ஆர்.சி. மில்லில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சாலையில் திருப்பூரில் இருந்து சென்னை, சேலம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு ஊத்துக்குளி வழியாக செல்லும் ஏராளமான பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்பட இரு சக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து மிகுதியான பகுதியாகும். இப்படிப்பட்ட நிலையில் இந்த பாலத்தின் அடியில் உள்ள சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இந்த பள்ளத்தின் தார் சாலை, வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது. இதனை அறியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வந்து, அந்த பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். இதனால் உடலில் சீராய்ப்பு, ரத்த காயம் ஏற்படுகிறது. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அந்த சாலையின் பள்ளத்தில் விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மழை காலத்தில் அந்த இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மேலும் அதிக அளவில் விபத்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×