என் மலர்

  நீங்கள் தேடியது "veerapandi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்தடை இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அருள்புரம் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின்தடை

  திருப்பூர் :

  திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை 22-ந்தேதி மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டாம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில்.

  ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்:இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு. காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர்.

  அருள்புரம் துணை மின் நிலையம்:அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதுார், உப்பிலிபாளையம், அண்ணா நகர், லட்சுமி நகர், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம். செந்துாரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகர், அய்யாவு நகர், நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர், சின்னக்கரை, சேடபாளையம் மற்றும் ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
  • பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

  திருப்பூர் :

  வீரபாண்டி மற்றும் உடுமலை ஆகிய துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 1-ந்தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி துணைமின் நிலையம்: தந்தை பெரியாா் நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள எம்.எஸ்.டையிங் பகுதிகள், ஆா்.ஆா்.டையிங் சுற்றியுள்ள பகுதிகள், நத்தகாடு தோட்டம் பகுதிகள்.

  உடுமலை துணை மின் நிலையம்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூா், சோமவாரபட்டி, ஆா்.பி.நகா், பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கல் நகரம், குறிச்சிக்கோட்டை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஸ்திர ஹோமம் போன்ற யாகங்கள் நடைபெற்றது.
  • கோபுரத்தில் கலசங்கள் வைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

  வீரபாண்டி :

  திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி வித்யாலயா தமிழ்நாடு சர்வதேச சங்க வளாகத்தில் அமைந்துள்ள வித்ய கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஸ்திர ஹோமம் போன்ற யாகங்கள் நடைபெற்றது. பின்பு கோபுரத்தில் கலசங்கள் வைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை ஆகம பிரவீண கயிலை மணி சிவசெந்தில் குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தினர்.

  கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு சர்வோதய சங்கத்தலைவர் டி.திருமலை நம்பி, செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் எஸ்.சரவணன், காந்தி வித்யாலயா முதல்வர் முத்து கண்மணி மற்றும் சர்வதேச சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
  • காலி மதுப்பாட்டில்களை விளைநிலங்களில் வீசியும் உடைத்தும் அச்சுறுத்தி வருகின்றனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் தெற்கு தாலுகா வீரபாண்டி கிராமத்தில் மாநகராட்சி வார்டு எண் 54ல் ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த சில மாதங்களாக ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  ஓடையை ஆக்கிரமித்துள்ள சிலர் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் ஆக்கிரமிக்க முயற்சிப்பதுடன், காலி மதுப்பாட்டில்களை விளைநிலங்களில் வீசியும் உடைத்தும் அச்சுறுத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் உள்ள தடுப்பு வேலிகளை சேதப்படுத்தியும் வருகின்றனர். அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாதபடி சாலையில் பள்ளங்கள் தோண்டி வைத்துள்ளனர். சமூக அமைதியை கெடுக்கும் வகையில் செயல்படும் அவர்கள் மீது நடவடிக்நகை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் கொடுத்த மனுவில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் உரிய விசாரணை நடத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டையிங் நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று கரும்புகை வெளியானது.
  • தீயணைப்புத் துறையினர் 20 நிமிடம் போராடி தீைய அணைத்தனர்.

  வீரபாண்டி :

  வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட வண்ணாம்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் டையிங் நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று கரும்புகை வெளியானது. உடனடியாக அருகில் இருப்பவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் டையிங் நிறுவனத்தில் உள்வளாகத்தில் கொட்டப்பட்டு இருந்த பஞ்சில் தீப்பிடித்து எரிந்தது.

  இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் 20 நிமிடம் போராடி தீைய அணைத்தனர். மேலும் டையிங் நிறுவனத்தில் பெரிய அளவில் சேதாரம் ஏதும் ஏற்படவில்லை என்றும் வளாகத்தில் கொட்டப்பட்டு இருந்த பஞ்சில் மட்டுமே தீப்பிடித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்விநியோகம் தடை.
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

  திருப்பூர் :

  திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  வீரபாண்டி துணை மின் நிலைய பகுதியில் வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம் (வாய்க்கால் மேடு ) குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம் பாளையம் எம்.ஏ.,நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லைநகர் , டி.ேக.டி.மில்.

  ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையம்:-

  இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டி பாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ். நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே. காட்டன் சாலை, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர்

  அவினாசி துணை மின்நிலையம்

  அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிப்பாளையம், காமராஜ்நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி. காலனி, கிழக்கு , மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்திநகர், எஸ்.பி., அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.    

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
  • காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை வீரபாண்டி பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

  திருப்பூர் :

  அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் வினியோகம் தடை செய்யப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இதேபோல் திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கே.ஜி.பாளையம் பீடர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை வீரபாண்டி பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், பொரையகவுண்டர் தோட்டம்,அம்மன் டையிங் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
  • பள்ளி தலைமையாசிரியர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது

   வீரபாண்டி :

  திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. பின்பு பள்ளி தலைமையாசிரியர் சார்பில் ஒரு மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி1927ம் ஆண்டு தொடக்கபள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 1984ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2002ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2010ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. தற்பொழுது 1932 மாணவ மாணவிகள் உள்ளார்கள். கல்வி கற்பதற்கு 42 வகுப்பாறைகள் தேவைப்படுகிறது.ஆனால் 20 வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது. மேலும் அறிவியல் ஆய்வு கூடமும் தேவைப்படுகிறது. மேலும் 22 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் மாணவ மாணவிகள் வகுப்பறையின்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகிறார்கள்.

  மேலும் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் வருவாய் துறை மூலம் பெறப்பட்ட தகவலின்டி சுமார் 10ஏக்கர் நிலம் உள்ளது.இந்த இடம் பல்லடம் தாலுக்கா அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது.இந்த இடங்கள் பள்ளியிலிருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் அதன் அருகில் சுமார் 5 ஏக்கர் நிலம் பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலின் டிரஸ்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தினை மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுவில் சொல்லப்பட்ட இடத்திற்கான ஆதாரங்களை கேட்டார். ஆதாரம் இருந்தால் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பேசுவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

  இந்த ஆய்வின் போது மாநகராட்சி மண்டல தலைவர் பத்மநாபன்மற்றும் 54 -வது உறுப்பினர் சி. அருணாச்சலம், மற்றும் 53-வது உறுப்பினர் மணிமேகலை ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
  • உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  திருப்பூர்

  திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் உள்ள முருகம்பாளையம் மின் பாதையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கண்ணன் காட்டேஜ், பாறக்காடு 1 முதல் 6-வது வீதி வரை, ஆசாரி தோட்டம், கோடிஸ்வரா கார்னர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

  இதுபோல் திருப்பூர் பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்தில் செட்டிபாளையம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், வெங்கடேசா நகர், செல்வலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

  அதுபோல் திருப்பூர் திருநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாைள காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆலாங்காடு, வெங்கிடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.பி.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டரி பள்ளி முதல் மற்றும் 2-ம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முதசாமி கவுண்டர் வீதி, நடராஜ் தியேட்டர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

  இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
  • பாலாஜி நகா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
  • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

  வீரபாண்டி :

  திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்சனை பற்றி பேசிய நிலையில், வீரபாண்டி பேருந்துநிலையத்திலிருந்து ஜே.ஜே.நகர் செல்லும் வரை 3 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறியது. அங்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர், எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
  • குறைபாடுகள் கண்டறியப்பட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  திருப்பூர்  :

  திருப்பூர் 54-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சி .அருணாச்சலம் தலைமையில், மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் திருப்பூர் ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

  சிறப்பு விருந்தினராக திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். 54 -வது வார்டு கவுன்சிலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4ம் மண்டல பொறுப்பாளர் அருணாச்சலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பாரதி, ஜெயக்குமார், ஜீவானந்தம், ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.

  சிகிச்சை முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 100க்கு ம் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  ×