என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வீரபாண்டி டையிங் நிறுவனத்தில் தீ விபத்து
- டையிங் நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று கரும்புகை வெளியானது.
- தீயணைப்புத் துறையினர் 20 நிமிடம் போராடி தீைய அணைத்தனர்.
வீரபாண்டி :
வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட வண்ணாம்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் டையிங் நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று கரும்புகை வெளியானது. உடனடியாக அருகில் இருப்பவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் டையிங் நிறுவனத்தில் உள்வளாகத்தில் கொட்டப்பட்டு இருந்த பஞ்சில் தீப்பிடித்து எரிந்தது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் 20 நிமிடம் போராடி தீைய அணைத்தனர். மேலும் டையிங் நிறுவனத்தில் பெரிய அளவில் சேதாரம் ஏதும் ஏற்படவில்லை என்றும் வளாகத்தில் கொட்டப்பட்டு இருந்த பஞ்சில் மட்டுமே தீப்பிடித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






