search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபாண்டி அரசு பள்ளியில் கோவை எம்.பி., ஆய்வு
    X

    வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மாணவிகளிடம் குறைகளை கேட்கும் காட்சி.

    வீரபாண்டி அரசு பள்ளியில் கோவை எம்.பி., ஆய்வு

    • பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளி தலைமையாசிரியர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. பின்பு பள்ளி தலைமையாசிரியர் சார்பில் ஒரு மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி1927ம் ஆண்டு தொடக்கபள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 1984ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2002ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2010ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. தற்பொழுது 1932 மாணவ மாணவிகள் உள்ளார்கள். கல்வி கற்பதற்கு 42 வகுப்பாறைகள் தேவைப்படுகிறது.ஆனால் 20 வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது. மேலும் அறிவியல் ஆய்வு கூடமும் தேவைப்படுகிறது. மேலும் 22 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் மாணவ மாணவிகள் வகுப்பறையின்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகிறார்கள்.

    மேலும் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் வருவாய் துறை மூலம் பெறப்பட்ட தகவலின்டி சுமார் 10ஏக்கர் நிலம் உள்ளது.இந்த இடம் பல்லடம் தாலுக்கா அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது.இந்த இடங்கள் பள்ளியிலிருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் அதன் அருகில் சுமார் 5 ஏக்கர் நிலம் பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலின் டிரஸ்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தினை மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுவில் சொல்லப்பட்ட இடத்திற்கான ஆதாரங்களை கேட்டார். ஆதாரம் இருந்தால் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பேசுவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி மண்டல தலைவர் பத்மநாபன்மற்றும் 54 -வது உறுப்பினர் சி. அருணாச்சலம், மற்றும் 53-வது உறுப்பினர் மணிமேகலை ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

    Next Story
    ×