என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shutdown"

    • இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.
    • அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்றில் மிகப்பெரிய பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது.

    அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அரசு முடக்கம், எந்த மாற்றமும் இல்லாமல் 43வது நாளாக இன்று வரை தொடர்ந்தது.

    இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர். 670,000 பேர் வேலை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அத்தியாவசிய சேவைகளை கூட அணுக முடியவில்லை.

    அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் இந்த நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனுடன், அமெரிக்காவில் வேலையின்மையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 4.6 சதவீதமாக இருந்த சராசரி வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    டிரம்பின் பிடிவாதமே இந்த பணிநிறுத்தம் தொடரக் காரணம் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறினர்.

    இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிதி மசோதாவை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது .

    மசோதாவுக்கு ஆதரவாக 222 உறுப்பினர்களும், எதிராக 209 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஆறு ஜனநாயகக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்தனர்.

    இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டு, பிரதிநிதிகள் சபைக்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு சேவைகளுக்கான நிதி விடுவிக்கப்படும்.

     இந்த நிதி மசோதாவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.  இதனைத்தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளது. 

    இருப்பினும், விமான சேவைகள் உட்பட அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது நேரம் ஆகும்.  

     முன்னதாக பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அமைப்பான காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடப்பட்டது.

    1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னையில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை.
    • மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னையில் 27.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    ஆலந்தூர்: மேட்டுப்பாளையம், சந்திரன் தெரு, வண்டிக்காரன் சாலை, கோபாலகிருஷ்ணன் தெரு, விக்னேஷ்வரா தெரு, புது தெரு, மசூதி காலனி, பிள்ளையார் கோயில் தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, சாத்தானிபேட்டை 1வது தெரு, செங்கேனியம்மன் கோயில் 1வது தெரு, மார்கோ தெரு, மதுரை 3வது தெரு, மார்கோ தெரு, 3வது தெரு. புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, மண்டி தெரு, நிதி பள்ளி தெரு, லப்பை தெரு, வேளச்சேரி சாலை, வேதகிரி தெரு சந்தை.

    நந்தம்பாக்கம்: செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் கோயில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்.

    கொரட்டூர்: சுந்தர் தெரு, குபேரகணபதி தெரு, விஓசி தெரு, திருவள்ளுவர் தெரு, வர்னினர் தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, காக்கப்பள்ளம், எம்டிஎச் சாலை, ராஜா தெரு, டிஎம்பி நகர், அவ்வை தெரு, மாரியம்மன் கோயில் தெரு.

    அடையாறு: சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டிஏ.என்கிளேவ் ஆப்., விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு, ராம் நகர் 1 முதல் 7வது தெரு, பை பாஸ் மெயின் ரோடு,அக்ஷ்யம் ஹோட்டல் முதல் மஹிந்திரா ஷோ ரூம் வரை.

    கோட்டூர்புரம்: ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபாணி 1 முதல் 2வது தெரு.

    கே.கே.நகர்: கே.கே.நகர் 1 முதல் 12 செக்டார், ராஜாமன்னார் சாலை, ராமசுவாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசபாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1,9,11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 அடி சாலை.

    பல்லாவரம்: 15 முதல் 16 தெரு புதிய காலனி, ஜிஎச், பிஎஸ்என்எல், மும்மூர்த்தி நகர், தர்கா சாலை, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஹைவே நகர், கரேட் வூஃப் நகர் ஒரு பகுதி, ஆபிசர் லேன், வீரன் சந்து, ராம் லிங்கம் தெரு, ஹரியன் நகர், ராணுவ முகாம், மல்லிகா தெரு, ராணுவ முகாம் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு.

    ஆவடி: ஜே.பி நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கிரின் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஓரகடம் சொசைட்டி.

    சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி பிக், ஆக்சிஜன் நகர் மரம், ஆத்தினி தெரு, ரேடியன்ஸ் மெர்குரி.

    துரைப்பாக்கம்: ராஜு நகர், மேட்டுக்குப்பம், விஓசி தெரு, பிடிசி குடியிருப்பு, ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி கார்டன், சௌடேஸ்வரி நகர், சிடிஎஸ், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி, சேரி பகுதி சாலை, ஓஎம்ஆர், எம்ஜிஆர் தெரு, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி.

    போரூர்: ஐயப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், தக்ஷின் அபார்ட்மெண்ட், குப்புசாமி நகர், அருணாசலம் ரோடு, காடுவெட்டி,வீரராகவபுரம் ,ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.

    • இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    • ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினர் கூறியதாவது:-

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல், நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும், ஏப்ரல் 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அவிநாசி, வீரபாண்டி, பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

    அவிநாசி :

    பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5-ந்தேதி (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : பல்லடம் துணை மின் நிலையம்( காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை): பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

    பனப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):பனப்பாளையம், சேரன் நகா், ராயா்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், எல்லங்காடு, மாதப்பூா், மெஜஸ்டிக் சா்க்கிள், செந்தில் நகா், பெத்தாம்பாளையம், மாதேஸ்வரன் நகா், சிங்கனூா்.

    உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா் மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிப்பட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.

    அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.

    வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம் (வாய்க்கால்மேடு), குளத்துப்பாளையம், கரைப்பாளையம், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி.மில்.

    • தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்ட ரஸ்தா சாலையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் குப்பைகளை கொட்ட அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக குப்பை களை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின் தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-குப்பைகள் கொட்டும் விவகாரம் தொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கடந்த 6 மாதங்களாக தேவகோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது.

    நகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் குப்பைகளை ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அந்த இடத்தை தயார் செய்து தரவில்லை.

    இதை கண்டித்து தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்பும் தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது
    • தஞ்சை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு உரிய அளவு காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் தண்ணீர் திறந்து விட எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சி , இயக்கத்தினர், அமைப்பினர், தொழில் சங்கத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

    இதையடுத்து தஞ்சை காந்திஜி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் திறந்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்திரல் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், துணை செயலாளர் கனகவல்லிபாலாஜ், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், நிர்வாகிகள் 48-வது வார்டு பிரதிநிதி செழியன், 49-வது வார்டு சண்முகம், ராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், வயலூர் ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு மனோகரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்காராவி, வெற்றிவேந்தன், ம.தி.மு.க. மாவட்டசெயலாளர் தமிழ்செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி , செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் திலகர், பொருளாளர் சதீஷ்பாலாஜி, நகர பொருளாளர் செல்வம், நகர தலைவர் வாசுதேவன் , நகர செயலாளர் துரைகந்தமுருகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் சூரியகுமார், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆனந்த், அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் இருதயராஜ், விடுதலை தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாகக்குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, நிர்வாகிகள் ராஜா, பேர்நீதி ஆழ்வார், மக்கள் கலை இலக்கியம் ராவணன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஜெய்னூலாப்தீன், மனித நேய மக்கள் கட்சி பாதுஷா, விவசாய சங்க நிர்வாகி சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.
    • உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா?

    ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையத்தளம் ஒரே மாதத்தில் 3வது முறையாக முடங்கியுள்ளது.

    புத்தாண்டை ஒட்டி அதிக வெப் டிராபிக் காரணமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.

    இதன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பல பயனர்கள் இணையதளத்தில் உள்நுழைய முடியவில்லை, மேலும் உள்நுழைய முடிந்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

    காலை 10 மணிக்கு பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றபோது இந்த செயலிழப்பு ஏற்பட்டது. இதனைத்தொடந்து பல பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    @RailMinIndia ஐஆர்சிடிசி இணையதளம் இன்று காலை 10 மணி முதல் செயல்படவில்லை, என்னால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

     

    நான் வாடிக்கையாளர் சேவையை அழைத்தபோது, தளம் பராமரிப்பில் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள், உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா? உங்கள் கஸ்டமர் கேர் குழுவை நீங்கள் மாற்ற வேண்டும் என்று ஒரு பயனர் X இல் (முன்னர் Twitter) பதிவிட்டுள்ளார்.

    தட்கல் முன்பதிவு-கிளாசிக் நேரத்திற்கு சற்று முன் ஐஆர்சிடிசி செயலிழந்தது என்று மற்றொரு பயனர் எக்ஸ் தளத்தில் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்தார். இந்நிலையில் தட்கல் நேரம் கடந்த பின்னர் ஐஆர்சிடிசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாதவர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பித் தவிக்கின்றனர். 

    • துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் ஒரு நாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
    • அதன்படி வேடசந்தூரில் நாளை பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் :

    ரங்கநாதபுரம் துணைமின்நிலையத்தில் நாளை 16-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதனைசார்ந்த கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதயம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • கருவலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    தெற்கு அவினாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகர், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி மற்றும் உகாயனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுபோல் அவினாசியை அடுத்த கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துைண மின்நிலையத்தில் மின்சாரம் நிறுததம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாைளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • மாதந்தோறும் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி செங்குறிச்சி மற்றும் கொசவட்டியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே செங்குறிச்சி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கொசவபட்டி, செம்மடைப்பட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், பஞ்சம்பட்டி, வீரசின்னம்பட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

    • காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
    • பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    வீரபாண்டி மற்றும் உடுமலை ஆகிய துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 1-ந்தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி துணைமின் நிலையம்: தந்தை பெரியாா் நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள எம்.எஸ்.டையிங் பகுதிகள், ஆா்.ஆா்.டையிங் சுற்றியுள்ள பகுதிகள், நத்தகாடு தோட்டம் பகுதிகள்.

    உடுமலை துணை மின் நிலையம்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூா், சோமவாரபட்டி, ஆா்.பி.நகா், பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கல் நகரம், குறிச்சிக்கோட்டை.

    • ecom.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பொருட்களை விற்று வந்தனர்.
    • வாடிக்கையாளர் வரவேற்பு குறைந்துவிட்டதால் இந்த சேவை நிறுத்திவிட்டது.

    திருப்பூர் :

    தபால்துறை புதிய இ- காமர்ஸ் தளம் ஒன்றை கடந்த 2018ல் துவங்கியது. இதன்கீழ் இந்தியா போஸ்ட் மூலம்தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய விரும்புபவர்கள், ecom.indiapost.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது பொருட்களை விற்று வந்தனர்.

    கிராமப்புற வணிகர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவற்றுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.இதற்கு வாடிக்கையாளர் தரப்பில் வரவேற்பு குறைந்துவிட்டதால், இந்த சேவையை நிறுத்திவிட்டது தபால்துறை. தற்போது இணையதளமும் முடக்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருப்பூர் தபால்துறை வெளியிட்டுள்ளது.

    ×