search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stream Encroachment"

    • ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • காலி மதுப்பாட்டில்களை விளைநிலங்களில் வீசியும் உடைத்தும் அச்சுறுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தாலுகா வீரபாண்டி கிராமத்தில் மாநகராட்சி வார்டு எண் 54ல் ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த சில மாதங்களாக ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஓடையை ஆக்கிரமித்துள்ள சிலர் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் ஆக்கிரமிக்க முயற்சிப்பதுடன், காலி மதுப்பாட்டில்களை விளைநிலங்களில் வீசியும் உடைத்தும் அச்சுறுத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் உள்ள தடுப்பு வேலிகளை சேதப்படுத்தியும் வருகின்றனர். அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாதபடி சாலையில் பள்ளங்கள் தோண்டி வைத்துள்ளனர். சமூக அமைதியை கெடுக்கும் வகையில் செயல்படும் அவர்கள் மீது நடவடிக்நகை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் கொடுத்த மனுவில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் உரிய விசாரணை நடத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

    ×