search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே செங்குத்தான சாலையால் விபத்து அபாயம்
    X

    பள்ளி நுழைவு வாயில் பகுதியில் உள்ள செங்குத்தான சாலை.

    செம்பட்டி அருகே செங்குத்தான சாலையால் விபத்து அபாயம்

    • சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. தற்போது, அது நான்கு வழிசாலையாக மாறியுள்ளதால், வாகனங்கள் அதிவிரைவாக செல்கின்றன. இச்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கென தனிப்பாதை ஏதும் அமைக்கப்படவில்லை.

    பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடையும் அமைக்கப்படவில்லை. மேலும், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், பள்ளிக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் அபாய சூழல் இருந்து வருகிறது.

    சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களிலேயே நிறுத்தக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். செங்குத்தாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். 10-அடி ஆழமுள்ள சாக்கடை பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென, மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×