search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபரிமலை சீசன் தேங்காய்களுக்கு கிராக்கி
    X

    சபரிமலை சீசன் தேங்காய்களுக்கு கிராக்கி

    • மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் :

    சபரிமலை சீசன் என்பதால் தேங்காய் விற்பனை ஜோராகியுள்ளது. தேங்காய்க்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    வழக்கமாக சின்னரகம் ரூ.8 முதல் ரூ.10-க்கும் நடுத்தரம் ரூ. 14 முதல் 16 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் 18 முதல் 24 ரூபாய்க்கும் விற்கப்படும். தேங்காய்க்கு கிராக்கி நிலவுவதால் சின்னரகம் 11 ரூபாய், நடுத்தரம் 15 முதல் 18 ரூபாய், பெரியது 22 முதல் 26 ரூபாயாக மாறியுள்ளது.

    மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது. கிலோ 25 முதல் 40 ரூபாய் இருந்த கறிவேப்பிலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டு 8 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்படும். தற்போது ஒரு கட்டு 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கிறது.

    Next Story
    ×