search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
    X
    ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.

    திருப்பூரில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

    மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் கற்பிக்கும் 1866 ஆசிரியர்களுக்கு நேரடிப்பயிற்சி வழங்க உள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகள்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 23 ம் கல்வி ஆண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2022 - 23 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு நாட்காட்டியின்படி எண்ணும் எழுத்தும் திட்ட மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் சங்கர் மற்றும் பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆகியோர் தலைமை ஏற்றுத் தொடங்கி வைத்தனர்.

    பயிற்சி நிறுவன முதல்வர் தனது தலைமை உரையில், எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம், குறிக்கோள்கள், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்தல், வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல், கற்றல் மூலைகளின் பயன்பாடு, மதிப்பீட்டுப் பணியின் முக்கியத்துவம், வட்டார அளவில் நடைபெறும் பயிற்சி திட்டம் குறித்து விளக்கி கூறினார்.

    மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் கௌரி, மகேஸ்வரி, தெய்வானை, காளிதாஸ், நாகராஜன், சிந்துஜா, காசி, உமாதேவி, கார்த்திகேயன், தமிழ்செல்வி, ஸ்ரீதர், குமார், பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாவட்ட அளவில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சியினை வழங்கினர்.

    இப்பயிற்சியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம், கையேடுகள் அறிமுகம், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், கதைக்களம், படைப்பாற்றல் களம், கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உருவாக்குதல், செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல், உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளுதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டன. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் கற்பிக்கும் 1866 ஆசிரியர்களுக்கு நேரடிப்பயிற்சி வழங்க உள்ளனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் விமலா தேவி, பாபி இந்திரா, முனைவர் சரவணகுமார், விரிவுரையாளர்கள் ராஜா, பிரபாகர், சுகுணா, கௌசல்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    Next Story
    ×