search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் செய்தி"

    சேலம் புதிய பஸ் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி மீது பஸ் சக்கரம் ஏறி பரிதாப இறந்தார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு அந்த பகுதிகளில் இருந்துவரும் மாற்றுத்திறனாளி செல்வராஜ் (வயது 70)என்பவர் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில்  தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்றிருந்த அரசு பேருந்து திடீரென பின்னால் இயக்கப்பட்டது. இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வராஜ் காலின் மீது ஏறி இறங்கியது. இதனால் வலியால் துடித்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டிய தர்மபுரியை சேர்ந்த பச்சமுத்து (வயது44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பால் சொசைட்டி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பூலாவரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36).இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (வயது 25) என்ற மனைவி உள்ளார்.

    சக்திவேல் அந்த பகுதியில் பால் சொசைட்டி வைத்து நடத்தி வந்தார். கடந்த 3 மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த சக்திவேல்  நேற்று வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார் .

    இதை கண்ட உறவினர்கள் சக்திவேலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காலி பணியிடங்களை நிரப்பதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் ரெயில்வே பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

    ரெயில்வே துறையில் ஆட்குறைப்பு செய்ய வேண்டாம், காலியிடங்களை குறைக்கக் கூடாது, தெற்கு ரெயில்வே முழுவதும் உள்ள 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்பி வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கிளை செயலாளர்கள் ஜெகன், நெடுஞ்செழியன், அருண், ஜோன் நவீன்,  முத்து சுப்பிரமணி, எல்.ஆர்.எஸ் கோட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட எஸ்ஆர்எம்யூ  தொழிற்சங்கத்தை சேர்ந்த ெரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அயோத்தியாப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருப்பவர் கார்த்திகேயன் (வயது 45).

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம்லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .

    இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை உறுதி செய்த போலீசார் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படுமா? என்று அந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி, அருநூற்றுமலை, கல்வராயன்மலை கிராமங்கள், தர்மபுரி மாவட்டம் சேலூர், வேலனூர், பாலக்குட்டை, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களுக்கு முக்கிய மையமாக விளங்குகிறது.

    வாழப்பாடி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து, பட்டம் பயில விரும்பும் மாணவ–மாணவியர், சேலம், ஆத்தூர் , ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. 

    தொலைதூரத்திலுள்ள கல்லுாரிகளுக்கு குறித்த நேரத்திற்குசென்று திரும்ப முடியாமலும், தனியார் கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியரது பட்டம் படிக்கும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது.

    எனவே, வாழப்பாடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 

    எனவே வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி  தொடங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து செயல்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் ரெயில் மீண்டும் இயக்கியதற்கு வணிகர் சங்கத்தினர் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சேலத்திலிருந்து விருதாசலத்திற்கு 2 பயணிகள் ரெயில்  இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 2  ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

    இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

    வணிகர் சங்கத் தலைவர் ரவிசங்கர் கூறும்போது, சேலம்- விருத்தாச்சலம் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஆத்தூர் வழியாக எழும்பூருக்கு பகல் நேரம் சென்னை செல்ல புதிய ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். பெங்களூர் காரைக்கால் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

    ×