என் மலர்

  நீங்கள் தேடியது "தொடக்கம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மின் மோட்டார் பொருத்தும் பணி தொடக்கம்.
  குமாரபாளையம்:

  குமாரபாளையம் காவேரி நகர் நீரேற்று நிலையத்தில் 50 எச்.பி. மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கபட்டு வந்தது. 

  இது போதுமானதாக இல்லை என்பதால் ரூ.23 லட்சம் மதிப்பில் 60 எச்.பி. மோட்டார் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளை சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

  இதில்  பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், விஜயா, சியாமளா, ரேவதி, கிருஷ்ணவேணி, புஷ்பா, செல்வி, நந்தினிதேவி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்  உள்பட பலர் பங்கேற்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
  மதுரை

  மதுரை- ராமேசுவரம் இடையே காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும், முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்கள்  இயக்கப்பட்டு வந்தன. இவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.   

  இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுரை- ராமேசுவரம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படவில்லை.  இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

  தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் மதுரை-ராமேசு வரம் இடையே பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். 

  இதைத்தொடர்ந்து  2 ஆண்டுகளுக்கு பின்னர்  இன்று முதல் மதுரை- ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று அறிவி க்கப்பட்டது. அதன்படி இன்று  (30-ந் தேதி)  மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு மதுரை-ராமேசுவரம்  பயணிகள் ெரயில்  புறப்பட்டுச் சென்றது. 

  இந்த ரெயில் காலை 10:15 மணிக்கு ராமேசுவரத்துக்கு போய் சேர்ந்தது.மறு மார்க்கத்தில் ராமேசு வரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 9.55 மணிக்கு மதுரை வந்து சேரும். 

  இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜ கம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, உச்சிப்புளி, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

  மதுரை- ராமேசுவரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுவது, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலில் பயணிகள் மிகவும் உற்சாகமாக பயணம் செய்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
  ஏற்காடு:

  சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 

  இந்த மலர்க்கண்காட்சியில் மேட்டூர், அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கம் அருகே அனைத்து துறையின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளையும் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

  நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  மேலும், கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும் என்றார்.  

  இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளை நிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றார்.

  விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளும்.ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூர் மலைவாழ் மக்களுக்கும்,உள்ளூர் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார். 

  திறப்புவிழா நிகழ்ச்சியில் அண்ணாபூங்கா ஊழியர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம் போட்டோ எடுத்துக்கொண்ட காட்சி.

  இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ் ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளர் டி.எம்.செல்வகணபதி. ஏற்காடு ஒன்றிய பொருப்பாளர் தங்கசாமி,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாலு, கிளை செயலாளர்கள் ஆட்டோ ராஜா, குணசேகரன்,வைரம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார்.மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  ×