search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடக்கம்
    X

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடக்கம்

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது. உப்பு உற்பத்தியில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரிகள் மூலமாகவே அனுப்படுகிறது.

    இந்தநிலையில் கஜா புயலால் கடலிலிருந்து சேர் உப்பள பகுதியில் சேறு புகுந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தற்சமயம் உப்பு உற்பத்தி சீசனில் உப்பு உற்பத்தி செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் உப்பு இலாகா அதிகாரிகள் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களிட மிருந்து இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.

    இதனால் உப்பு உற்பத்தி பணிகள் தற்சமயம் 30 சதவீதமே நடந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி துவங்க ஒரு மாத காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×