search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale deal"

    ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் கூறியுள்ளார். #RafaleDeal #KapilSibal
    புதுடெல்லி:

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெக்ரிஷி, கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தார்.

    அந்த காலகட்டத்தில்தான், அதாவது 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, ரபேல் ஒப்பந்ததை இறுதி செய்து அறிவித்தார்.

    நிதித்துறை செயலாளர் என்ற முறையில், ரபேல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ராஜீவ் மெக்ரிசி பங்கேற்றுள்ளார். எனவே, அவர் ரபேல் பேரம் குறித்து தணிக்கை செய்வதற்கு உகந்தவர் அல்ல. ஆகவே, ராஜீவ் மெக்ரிஷி, ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார். #RafaleDeal #KapilSibal 
    ரபேல் போர் விமானம் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்து பேசினர். #RafaleDeal #HAL #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அந்த ஊழியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராக உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

    போர் விமானங்களை தயாரிப்பதில் எந்த சிரமமும் எங்களுக்கு கிடையாது. உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் அங்கு நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.   #RafaleDeal #HAL #RahulGandhi 
    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பதால் ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #AlokVerma #Rafaleprobe #Rahulgandhi
    புதுடெல்லி:

    மத்திய அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  23-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றம் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் அலோக்  வர்மா தொடரவிருந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். நீதி நிலைநாட்டப்பட்டதன் மூலம் எங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.


    அவர்கள் ரபேல் விவகாரத்தில் இருந்து ஓடிப்போக முடியாது. அது நடக்காது. மக்கள் மன்றத்தில் விவாதம் நடத்தாமல் மோடி ஓடினார். ரபேல் விவகாரத்தில் உண்மை இருப்பதால் உண்மையிடம் இருந்து யாரும் தப்பியோடி விட முடியாது.

    ரபேல் ஒப்பந்தத்தில் மக்களின் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்தது சந்தேகத்தின் நிழல் துளிகூட இல்லாமல் இந்த விசாரணையில் தெரியவரும். அடுத்து இனி என்ன நடக்கும்? என்று பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CBIDirector #AlokVerma #Rafaleprobe #CBIenquiry #Rahulgandhi #AnilAmbani
    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்து இன்று பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திரா எம்.பி.யால் பரபரப்பு ஏற்பட்டது. #TDPMP #NaramalliSivaprasad #MGR
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களவையை செயல்பட விடாமல் இடையூறு செய்ததாக அ.தி.மு.க.வை சேர்ந்த 31 உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும் இவர்கள் 46 பேரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமீபத்தில் உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி அமளியில் ஈடுபட்டனர். தனியாக இருந்த ஒரேயொரு அ.தி.மு.க. எம்.பி. மட்டும் சபாநாயகர் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினார்.

    அவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்தவாறு குரல் எழுப்பிய ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    நரமள்ளி சிவபிரசாத் என்ற அந்த உறுப்பினர் இதற்கு முன்னர் பெண் வேடமிட்டும், மந்திரவாதி, சலவை தொழிலாளி ஆகிய வேடங்களிலும் முன்னர் மக்களவைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து அமளியும் கூச்சலும் நிலவியதால் 5 நிமிடம் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு எழுந்துச் சென்று விட்டார். #TDPMP #NaramalliSivaprasad #MGR 
    பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். 

    இதற்கிடையே, ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ராகுல்காந்தி அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும். 

    ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்படவில்லை என ராகுல் கூறியது தவறு. ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும், ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளது என பதிவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங். தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

    அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம்  கொடுக்கிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். 



    இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த ஒரு ஆர்டரும் பெறப்படவில்லை. 

    எனவே, பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி ஆர்டர் தந்ததற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
    மக்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது என்றார். #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்  இன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 
     
    நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க  விருப்பம் கிடையாது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. 



    வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வழங்கப்படும். ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

    பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    ரபேல் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு உடனே அனுமதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார். #WinterSession #LokSabha #SumitraMahajan
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரபேல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த அமளிக்கிடையிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியது.

    மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதற்காக கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.


    11 மணிக்கு மக்களவை கூடியதும், ரபேல் விவகாரம் குறித்து பேசுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கும்படி மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டார். ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறிய சபாநாயகர், மதியம் 12 மணிக்கு பிறகு 2 நிமிடம் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாக கூறினார்.

    உடனடியாக அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கோஷங்கள் எழுப்பியபடி அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இதனால் கடும் கோபம் அடைந்த சபாநாயகர், அவையை மதிக்காமல் நடக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று கூறி எச்சரித்தார்.

    அதன்பிறகும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. எனவே, பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #WinterSession #LokSabha #SumitraMahajan
    மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரபேல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த அமளிக்கிடையிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் திங்கட்கிழமை மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியது.

    11 மணிக்கு மக்களவை கூடியதும், ரபேல் விவகாரம் குறித்து பேசுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கும்படி மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டார். ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறிய சபாநாயகர், மதியம் 12 மணிக்கு பிறகு 2 நிமிடம் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாக கூறினார்.  உடனடியாக அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கோஷங்கள் எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனர். இதனால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் மற்ற கட்சிகளின் எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை எழுப்பினர். உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் நேரம் செல்லச் செல்ல உறுப்பினர்களின் அமளி அதிகரித்தது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    ரபேல் போர் விமானம் பேர ஊழல் தொடர்பாக மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள அரசு விசாரணையை தொடங்கும் என மத்திய முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். #NDA #JPCprobe #Rafaledeal #Chidambaram
    பெங்களூர்:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் பிரதமர் மோடி சிலருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை நேரடியாக குற்றம்சாட்டி நமது பிரதமர் நாட்டின் காவலாளி அல்ல. அவர் கொள்ளையடிப்பதில் வல்லவர் என பேசி வருகிறார்.

    இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. ரபேல் கொள்முதல் விவகாரத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் திருப்தியளிப்பதால் இது தொடர்பான விசாரணைக்கு அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் , ‘எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ரபேல் போர் விமானம் பேர ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு இந்த அரசு உத்தரவிடாவிட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் நாங்கள் அந்த காரியத்தை செய்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    ரபேல் ஊழலை முன்வைத்து நாங்கள் நடத்திய பிரசாரங்களால் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் இவ்விவகாரத்தால் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்தனர். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இது முக்கிய  பிரச்சனையாக எதிரொலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். #NDA #JPCprobe #Rafaledeal #Chidambaram

    ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல் அளித்ததாக கூறி, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தது. #RafaleCase #Congress #Parliament
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பில், ரபேல் விமான விலை விவரம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்ததாக கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், உண்மையில், அந்த அறிக்கை, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு தவறான தகவலை அளித்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து, தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    மக்களவையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இந்த நோட்டீசை கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். ஏனென்றால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு சட்ட அமைச்சகம்தான் ஒப்புதல் அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டுக்கு தவறான தகவலை அளித்து, நாடாளுமன்றத்தையும், மக்களையும் திசை திருப்பியது ஏன் என்று சட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கும்வகையில் இந்த நோட்டீசை கொடுத்துள்ளோம்.

    இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோரி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவை நேற்று கூடியபோது, உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அப்போது, குலாம் நபி ஆசாத், தான் கொடுத்த உரிமை மீறல் நோட்டீஸ் பற்றி தெரிவித்தார்.

    அதற்கு வெங்கையா நாயுடு, இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, காங்கிரஸ் உறுப்பினர் சுனில் ஜாக்கர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு கொடுத்தார். அம்மனு தனது பரிசீலனையில் இருப்பதாக சுமித்ரா மகாஜன் கூறினார்.

    அதுபோல், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, பா.ஜனதா தரப்பில் அதன் தலைமை கொறடா அனுராக் தாக்குர் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளித்தனர்.

    இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக்குழுவை விட சுப்ரீம் கோர்ட்டே உயர்ந்தது என்பதால், ரபேல் விவகாரம் குறித்து கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். #RafaleCase #Congress #Parliament 
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார். #ArunJaitley #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

    எனினும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அவர்கள் போராடி வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

    ஆனால் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    ரபேல் ஒப்பந்தத்தை போபர்ஸ் ஒப்பந்தத்துடன் ஒழுக்கக்கேடாக ஒப்பிடும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டு உள்ளார். ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் இல்லை, லஞ்சம் இல்லை, ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை.

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து வார்த்தைகளும் பொய் என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக கூறப்பட்ட பொய்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி இருக்கிறது.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை நீதித்துறை நடத்தி இருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அது சட்டப்பூர்வமாகி விட்டது. கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இதை கோர்ட்டு மட்டுமின்றி வேறு யாராலும் மறு ஆய்வு செய்ய முடியாது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக, ஒரு அரசியல் அமைப்பு (நாடாளுமன்ற கூட்டுக்குழு) எதையும் ஒருபோதும் கண்டு பிடிக்க முடியாது. எனவே ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #RafaleDeal 
    ×